அழகு நிலையத்துக்கு செல்வதாக கூறிய மணமகள் மாயம் : மாலையோடு காத்திருந்த மணமகன்.. விசாரணையில் ஷாக்!!

Author: Udayachandran RadhaKrishnan
30 May 2023, 7:33 pm

மத்திய பிரதேசத்தின் மொரீனா மாவட்டத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்றுக்கு இரு வீட்டாரும் நேற்று மாலை தயாராகி கொண்டிருந்தனர்.
இந்த நிலையில், மணமகள் தனது குடும்பத்தினரிடம், பியூட்டி பார்லருக்கு சென்று வருகிறேன் என கூறி விட்டு சென்றுள்ளார்.

அவருக்காக, மணமகன், மற்ற விருந்தினர்கள், உறவினர்கள் என பலரும் மணிக்கணக்காக காத்திருந்து உள்ளனர். நேரம் செல்ல, செல்ல மணமகனின் குடும்பத்தினர் பொறுமை இழந்து விட்டனர். மணமகளும் திரும்பி வரவில்லை.

இதனால், மணமகனின் சகோதரர் சென்று மணமகள் வீட்டாரிடம் இதுபற்றி கேட்டு உள்ளார். அதற்கு அழகுப்படுத்தி கொள்வதற்காக பார்லருக்கு சென்று உள்ளார். எந்த நேரத்திலும் மணமகள் திரும்பி விடுவார் என கூறியுள்ளனர்.

ஆனால், மணமகள் திருமணத்திற்கு முன்பே தனது காதலருடன் தப்பி விட்டார். இதனால், திருமண நிகழ்ச்சி களையிழந்தது.

ஆத்திரமடைந்த மணமகன் வீட்டார், கொத்வாலி காவல் நிலையத்திற்கு சென்று, மணமகளை காணவில்லை என புகார் அளித்து உள்ளனர். போலீசார் இதுபற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Good Bad Ugly Hit of Flop குட் பேட் அக்லி படம் ஹிட்டா? இல்லையா? இன்னும் எவ்வளவு கோடி வசூல் செய்யணும்?