சினிமா சூட்டிங்கின் போது இடி தாக்கி விபத்து… நிலைகுலைந்து போன படக்குழு ; அதிர்ச்சி தகவலை வெளியிட்ட பிரபல இயக்குநர்!!

Author: Babu Lakshmanan
31 May 2023, 8:43 am

திண்டுக்கல் ; பழனி அருகே திரைப்பட சூட்டிங்கின் போது இடி தாக்கிய விபத்தில் லைட்மேன்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியுள்ளனர்.

மார்கழி திங்கள் என்ற படப்பிடிப்பு பழனி அருகே கணக்கம்பட்டி பகுதியில் படமாக்கப்பட்டு வந்தது. இயக்குநர் சுசீந்திரன், மனோஜ் பாரதிராஜா, அப்புக்குட்டி, ரக்ஷனா மற்றும் பலர் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருந்தனர். மக்காச்சோளம் விவசாய இயற்கை சூழலில் படப்பிடிப்பானது நடைபெற்றுக் கொண்டிருந்தது.

இந்த பட பிடிப்பிற்க்காக சென்னையிலிருந்து பிரம்மாண்ட குடை லைட்கள் வரவழைக்கப்பட்டன. படப்பிடிப்பு நடைபெற்று கொண்டிருந்த போது சூறை காற்றுடன் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்யத் துவங்கியது.

அந்த படப்பிடிப்பு தளத்தில் அமைக்கப்பட்ட லைட் செட் மீது இடி இடித்தது. லைட் செட்கள் கீழே விழுந்தன. இதில் அதிர்ஷ்டவசமாக ஐந்து லைப் மேன்கள் உயிர் தப்பியதாக இயக்குனர் சுசீந்திரன் உருக்கமான தகவலை பதிவு செய்துள்ளார்.

  • Sarathkumar and Devayani in 3BHK after 30 years 30 ஆண்டுகளுக்கு பிறகு தேவயானியுடன் சரத்குமார்…வைரலாகும் படத்தின் டீசர்..!