சிங்கப்பூருக்காக முதலமைச்சர் ஸ்டாலின் வைத்த கோரிக்கை : மத்திய அரசுக்கு கடிதம்!!

Author: Udayachandran RadhaKrishnan
31 May 2023, 8:11 pm

மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், தமிழ்நாட்டில் 600-க்கும் மேற்பட்ட ஜப்பானிய நிறுவனங்கள் செயல்பட்டு வருவதாகவும், இந்தியாவில் ஜப்பானிய சமூகத்தின் மிகப்பெரிய தாயகமாக சென்னை திகழ்வதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

2019-ஆம் ஆண்டில் ஜப்பான் விமான நிறுவனம், சென்னை மற்றும் டோக்கியோ இடையே நேரடி விமான சேவை தொடங்கியதாகவும், கொரோனா தொற்று பரவல் காலத்தில் நிறுத்தப்பட்ட இந்த சேவை மீண்டும் தொடங்கப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

வருகிற ஜனவரி மாதத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை தமிழ்நாடு நடத்தவுள்ள நிலையில், சென்னைக்கும் டோக்கியோவுக்கும் இடையே நேரடி விமான சேவையை மீண்டும் தொடங்க நடவடிக்கைகளை எடுக்குமாறு முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அதேபோல், சிங்கப்பூருக்கும் மதுரைக்கும் இடையே அதிக விமானங்களை இயக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை, சிங்கப்பூர் அமைச்சர் சண்முகம் மற்றும் சிங்கப்பூரில் உள்ள புலம்பெயர் தமிழ் மக்கள் தன்னை சந்தித்தபோது முன்வைத்ததாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

எனவே, சிங்கப்பூருக்கும் மதுரைக்கும் இடையே அதிக விமானங்களை இயக்கிட அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அமைச்சரை முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?