சீமான் ட்விட்டர் கணக்கு திடீர் முடக்கம்.. நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகளுக்கும் சிக்கல்.. வெளியான பகீர் காரணம்!!!

Author: Udayachandran RadhaKrishnan
31 May 2023, 9:02 pm

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் தற்காலிகமாக பக்கம் முடக்கப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நாம் தமிழர் கட்சியின் தங்களது ட்விட்டர் பக்கங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டுள்ளது.

அந்த பக்கத்தில், சட்டப்பூர்வ கோரிக்கையை ஏற்று சீமானின் அதிகாரப்பூர்வ கணக்கு இந்தியாவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகளான இடும்பாவனம் கார்த்திக், பாக்கியராஜன் சுனந்தா உள்ளிட்டோரின் ட்விட்டர் கணக்களும் முடக்கப்பட்டுள்ளது .

இதனால் அதிர்ச்சியடைந்துள்ள நாம் தமிழர் கட்சியின் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். முன்னதாக தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து பதிவிட்டிருந்தார். இருப்பினும் ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டதற்கான குறிப்பிட்ட காரணம் குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை.

  • Ethirneechal Serial Fans are shocked and stop to watch என்ன கொடுமை இது ஈஸ்வரி.. எதிர்நீச்சல் சீரியலை பார்ப்பதையே நிறுத்திட்டேன்!