திமுக பிரமுகரின் பாரில் நேரத்தை மீறி மது விற்பனை : முதல் நாளே அதிரடி வேட்டையில் இறங்கிய பெண் டிஎஸ்பி!!!
Author: Udayachandran RadhaKrishnan1 June 2023, 3:59 pm
கோவை மாவட்டம் சூலூர் கருமத்தம்பட்டி சாலையில் கட்டிட அனுமதி இல்லாமல் கட்டப்பட்டு அதில் நவீன பார் செயல்பட்டு வருகிறது. இது திமுக பிரமுகருக்கு சொந்தமான கட்டிடம் என கூறப்படுகிறது.
இதன் காரணமாக அப்பகுதியில் அனுமதித்த நேரத்தை விட அதிக அளவில் மது விற்பனை நடைபெற்று வருவதாகவும் முகப்பில் ரெஸ்டாரன்ட் என விளம்பர பதாகை வைத்துவிட்டு உள்ளே பார் வசதியுடன் மது விற்பனை நடைபெற்று வருவதாக கூறி இப்பகுதி உள்ள பாஜகவை சேர்ந்த பெண்கள் தனியாருக்கு சொந்தமான அந்த மதுபான கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உடனடியாக அந்த பாறை மூட வேண்டும் எனவும் கட்டிட அனுமதி இல்லாமல் இயங்கி வருகிறது எனவும் போராட்டத்தில் ஈடுபட்டனர். திடீரென போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் உடனடியாக புதிதாக பொறுப்பேற்றுள்ள கருமத்தம்பட்டி உட்கோட்ட காவல்துறை பெண் துணை கண்காணிப்பாளர் தையல்நாயகி சம்பவ இடத்திற்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போலி மதுபானம் விற்பனை செய்வதாக தெரிவித்த நிலையில் டிஎஸ்பி திடீர் ஆய்வை மேற்கொண்டார் பின்னர் இது குறித்து விசாரணை நடத்த போவதாகவும் மதுபான விற்பனை உரிமம் இல்லாமல் நடைபெற்றால் நடவடிக்கை எடுக்கப் போவதாகும் தெரிவித்தார்.