இனி பயோமெட்ரிக் முறையில் நெல் கொள்முதல்… உடனே அமலுக்கு வருவதாக தமிழக அரசு அறிவிப்பு!!!
Author: Udayachandran RadhaKrishnan1 June 2023, 5:04 pm
தமிழகம் முழுவதும் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இன்று முதல் பயோமெட்ரிக் முறையில் மட்டுமே கொள்முதல் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
பயோமெட்ரிக் முறையில் நெல் கொள்முதல் செய்யப்படுவதால் அதிக அளவிலான விவசாயிகள் பயன்பெறுவார்கள் என கூறப்படுகிறது.
நேரடி கொள்முதல் நிலையங்களுக்கு வியாபாரிகள் நெல் கொடுப்பதை தவிர்க்க பயோமெட்ரிக் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்றும் நெல்கொள்முதல் செய்யப்படும் விவசாயிகளுக்கு உடனே பண விநியோகம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நெல்லை கொடுக்கும் விவசாயிகளிடம் மூட்டைக்கு கூடுதலாக பணம் வசூல் செய்யும் பணியாளர்கள் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.