ப்ளீஸ் ஒரு சான்ஸ் கொடுங்க… கெஞ்சி கேட்டும் துரத்திய பிரபல இயக்குனர் – இன்று வரை மறக்காத விஜய்!

Author: Shree
1 June 2023, 7:16 pm

தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், நடிகராகவும், தயாரிப்பாளராகவும் பல வெற்றிகளை பார்த்தவர் எஸ்.ஏ. சந்திரசேகர். தந்தை எஸ்ஏசியின் உதவியால் விஜய் ஆரம்பக்கட்டத்தில் சினிமாவில் நிலைத்திருக்க முடிந்தது. அவரது உதவி இருந்ததால் தான் இன்று இந்த உயரத்திற்கு வர முடிந்தது.

ஆனால், அதையெல்லாம் மறந்துவிட்டு விஜய் பெற்ற தந்தை என்று கூட பார்க்காமல் அவருடன் ஜென்ம விரோதியாக இருந்து வருவது பல மேடைகளில் வெளிப்படையாகவே தெரிந்தது. இது அவரது தந்தை எஸ்ஏசிக்கு மட்டும்மல்லாமல் ரசிகர்களையும் வருத்தமடைய செய்தது.

ஆரம்ப காலத்தில் தான் ஒரு இயக்குனர் என்பதால் இந்த நேரத்திலே மகனை எப்படியாவது பெரிய ஹீரோவாக்கிவிடவேண்டும் என பல இயக்குநர்களின் வீட்டு வாசலில் சான்ஸ் கேட்டு மணிக்கணக்கில் காத்து கிடந்தாராம் தந்தை எஸ் ஏ சந்திரசேகர்.

அப்படித்தான் ஒரு முறை பிரபல இயக்குனரான பாரதி ராஜாவிடம், என் மகன் விஜய்யை உங்களது படத்தில் அறிமுகம் செய்து வையுங்கள் என கெஞ்சி கேட்டுள்ளார். அதற்கு அவர், விஜய் சிறந்த நடிகராக வரமாட்டான் என கூறி அவரை ஒதுக்கியுள்ளார். மேலும், நீயே ஒரு இயக்குனர் தானே நீயே அவனை இயக்கு என்று உதாசீனப்படுத்தியுள்ளார்.

இது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய பாரதி ராஜா, என்னவோ தோணவில்லை இந்த பையன் வேண்டாம்னு அப்போ சொல்லி அனுப்பிட்டேன். ஆனால் இப்போ அவர் தான் நம்பர் ஒன் ஹீரோ. இதுபற்றி நான் விஜய்யிடமும் கூட சொன்னேன். ஆனால் விஜய் இன்னும் கோபத்தோடு, நீங்கள் ரிஜெக்ட் பண்ணியதை நான் மறக்கவில்லை என்று கூறுவான் என வருத்தத்தோடு தெரிவித்தார்.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!