தமிழ் சினிமாவில் காமெடி நடிகனாக தனது வாழ்க்கையை துவங்கி பின்னர் குணசித்திர வேடங்களில் நடித்து ஹீரோவானவர் நடிகர் கருணாஸ். இவர் நந்தா திரைப்படத்தில் நடித்து அறிமுகம் ஆனார். அதன் பிறகு காதல் அழிவதில்லை, பாபா, வில்லன், திருமலை, குத்து, பிதாமகன், திருடா திருடி, வசூல்ராஜா எம்.பி.பி.எஸ், அட்டகாசம், தேவதையை கண்டேன், திருவிளையாடல் ஆரம்பம், யாரடி நீ மோகினி, ராஜாதி ராஜா, பொல்லாதவன், எந்திரன் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
மேலும் இசையமைப்பாளராகவும் , பாடகராகவும் சிறந்து விளக்கியிருக்கிறார். இதனிடையே அரசியல் இணைந்துவிட்டார். இவர் “முக்குலத்தோர் புலிப்படை” என்னும் அரசியல் கட்சியின் தலைவராக உள்ளார். 2016 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்று திருவாடனை தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.
இதனிடையே கிரேஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். கிரேஸ் பாடகியாக இருந்து வருகிறார். இவர்களுக்கு கென் என்ற மகனும் டயானா என்ற மகளும் இருக்கிறார்கள். இந்நிலையில் கருணாஸ் பேட்டி ஒன்றில், நாம் எதற்கு எடுத்தாலும் மாத்திரை சாப்பிட்டு உடலை கெடுத்துக்கொள்கிறோம் என பேசியுள்ளார்.
என் மனைவி எங்கேயேனும் ஷூட்டிங் செல்லும் போது மேக்கப் பொருட்களுக்கு பதிலாக ஷூட்கேஸ் நிறைய மாத்திரைகள் தான் எடுத்து செல்வார். எந்த நோய்க்கு எந்த மாத்திரை போடவேண்டும் என அவர் மருத்துவம் படிக்காமலே அடுத்தவருக்கு சொல்லுவார் என பேசியிருக்கிறார். இதை வைத்து பார்த்தால் கிரேஸுக்கு பல விதமான நோய்கள் இருக்கிறது போல. அவ்வளவு மகழ்ச்சியாக இருக்கும் அவருக்குள் இப்படி ஒரு வேதனையா? என ஷாக் ஆகியுள்ளனர். இதோ அவர் பேசிய வீடியோ: