திமுக பிரமுகருக்கு சொந்தமான லாரி செட்டில் காவலாளி படுகொலை.. விசாரணையில் திக்.. திக்.. தூத்துக்குடியில் பயங்கரம்!!!

Author: Udayachandran RadhaKrishnan
5 June 2023, 9:10 am

தூத்துக்குடி 3வது மையில் எப்சி குடோன் அருகில் தூத்துக்குடி மத்திய ஒன்றிய திமுக செயலாளர் ஜெயக்கொடியின் லாரி செட் உள்ளது.

இங்கு கோரம்பள்ளத்தைச் சேர்ந்த ஞானராஜ் (வயது 55) என்பவர் காவலாளியாக இருந்து வருகிறார், நேற்று இரவு 10-க்கும் மேற்பட்ட லாரியும் நிறுத்தப்பட்டிருந்தன.

இன்று அதிகாலை எழுந்த லாரி ஓட்டுனர்கள் லாரி செட் தண்ணீர் தொட்டி அருகே ஞானராஜ் அரிவாளால் வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

சம்பவ இடத்துக்கு தென்பாகம் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி கொலைச் சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

எதற்காக காவலாளி ஞானராஜ் கொலை செய்யப்பட்டார் ? எப்போது கொலை செய்யப்பட்டார், கொலையை செய்த குற்றவாளிகள் யார் ? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இந்த நிலையில் கோரம்பள்ளத்தைச் சேர்ந்த ஜெயக்கொடியின் நண்பர் ஜெயக்குமார் என்பவர் குடித்துவிட்டு சுற்றி திரிந்துள்ளார். இதனால் அவரது ஆசிரியை மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 2 ஆண்டுகளாக பிரிந்து இருந்து வருகிறார்.

இந்நிலையில் நண்பர் ஜெயக்குமாருக்கு ஜெயக்கொடி தனது லாரி செட்டில் வேலை கொடுத்துள்ளார். தொடர்ந்து அவர் குடிபோதையில் சுற்றித்திரிந்ததால் ஜெயக்குமாரை வேலைக்கு வேண்டாம் என கூறி ஜெயக்கொடி வேலையில் இருந்து நிறுத்தி உள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு 10 மணிக்கு மேல் ஜெயக்கொடி லாரி செட் அலுவலகத்துக்கு வந்து தனது துணிகள் உள்ளே இருப்பதாகவும் கேட்டை திறந்து விடும்படியும் காவலாளி ஞானராஜிடம் கேட்டுள்ளார்.

கொலை செய்யப்பட்ட இடத்தில் ஜெயக்குமாரின் செருப்புகள் உள்ளதால் கொலை சம்பவத்தை அவர் செய்திருக்கலாம் என்று கோணத்தில் போலீசார் தீவிரமாக அவரைத் தேடி வருகின்றனர்.

  • sun pictures announced allu arjun atlee magnum opus project VFX நிபுணர்களின் துணையுடன் உருவாகும் அல்லு அர்ஜுன்-அட்லீ பிராஜெக்ட்..