வாரிசு நடிகைக்கு வாந்தி வர வைத்த பிரபல தமிழ் நடிகர்… எல்லாம் அந்த ஒரு காட்சியால் தான்!!!
Author: Vignesh5 June 2023, 10:49 am
படத்திற்கு படம் வித்யாசமான நடிப்பை வெளிப்படுத்தி சிறந்த நடிகர் என பெயரெடுத்தவர் நடிகர் விக்ரம். இவர் தமிழில் பல்வேறு ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருந்து வருகிறார். என் காதல் கண்மணி படத்தின் மூலம் 1990ல் அறிமுகமானார்.
அதன் பின்னர் தொடர்ந்து பல தோல்வி படங்களில் நடித்து துவண்டுபோன விக்ரமுக்கு சேது படம் மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது. அதன் பின்னர் காசி, ஜெமினி, தூள் , பிதாமகன் , அந்நியன் , தெய்வத்திருமகள் உள்ளிட்ட பல்வேறு ஹிட் படங்களில் நடித்துள்ளார்.
பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் விக்ரம் நடித்துள்ளார். அதையடுத்து பா.ரஞ்சித் இயக்கத்தில் ‘தங்கலான்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படம் கோலார் தங்க சுரங்கம் எப்படி உருவானது, அதில் தங்கலான் எனும் பழங்குடியினர் ( விக்ரம்) பங்கு என்ன என்பதை மையக்கருவாக வைத்து உருவாகியுள்ளது. இப்படத்தின் ஷூட்டிங் இன்னும் 2 நாட்கள் மட்டுமே இருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில், விக்ரம் நடிப்பில் பி.சி.ஸ்ரீராம் இயக்கத்தில் வெளியான படம் தான் மீரா. இந்த படத்தில் ஹீரோயினாக நடிகை ஐஸ்வர்யா நடித்து இருப்பார். ஐஸ்வர்யா விக்ரம் உடன் சேர்ந்து நடித்திருந்தது குறித்து தற்போது பேசியுள்ளார்.
அதில் அவர், விக்ரம் ஒரு சிறந்த நடிகர் என்றும், அவருடன் சேர்த்து நடித்த அனுபவங்கள் மறக்கமுடியாது எனவும், இப்படத்தின் போது லிப் லாக் காட்சி படமாக்கப்பட்ட போது தனக்கு ரொமான்ஸ் வரவில்லை வாந்தி தான் வந்தது என்று தெரிவித்துள்ளார்.