என்ன பண்ணாலும் தீராத மூட்டு வலியைக் கூட மாயமாக்கும் எண்ணெய் வைத்தியம்!!!

Author: Hemalatha Ramkumar
5 June 2023, 5:40 pm

வயது முதிர்ந்தவர்களுக்கு மூட்டு தேய்மானத்தின் காரணமாக வலி வருவது இயல்பு. ஆனால் தற்போது இளம் வயதினருக்கும் மூட்டு வலி சாதாரணமாக ஏற்படுகிறது. 50 சதவீதத்திற்கும் மேல் மூட்டு வலியால் அவதிப்படுபவர்களுக்கு காரணம் அதிகப்படியான உடல் பருமன் ஆகும். தலை முதல் தொடை வரை உள்ள மொத்த உடல் எடையும் கால் மூட்டின் மீது குவிவதால், மூட்டு வலி ஏற்பட்டு பின்பு நாளடைவில் மூட்டு தேய்மானத்திற்கு வழிவகுக்கின்றது.

மூட்டு வலியை குறைப்பதற்கு முறையான உடற்பயிற்சி மற்றும் நடை பயிற்சி செய்வது நல்ல பயன் தரும். மேலும் உடல் பருமனை குறைக்கக்கூடிய நார்ச்சத்துக்கள் கொண்ட உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வது நல்லது. இருப்பினும் இந்த மூட்டு வலியை போக்க ஒரு சில நாட்டு மருத்துவ முறைகளை பார்ப்போம்.

ஆலிவ் எண்ணெயை மூன்று ஸ்பூன் அளவு எடுத்து கொள்ளவும். இதனை நன்கு சூடுபடுத்தி அதில் 1 ஸ்பூன் அளவு ஆப்பிள் சைடர் வினிகர் கலக்கவும். இந்த கலவையை இரவு உறங்குவதற்கு முன் மிதமான சூட்டுடன் மூட்டு வலி இருக்கும் இடத்தில் நன்கு ஒத்தடம் கொடுக்கவும். இவ்வாறு தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் மூட்டுகளில் இருக்கக்கூடிய வலி வீக்கம் போன்றவை குறைவதை காணலாம்.

மூட்டு வலிகளுக்கு சிறந்த மருந்தாக குப்பைமேனி பயன்படுகிறது. மூட்டு இணைப்புகளில் இருக்கும் பாதிப்புகளை குணப்படுத்துவதில் மிகச் சிறந்த மருந்தாகும். குப்பை மேனி இலைகள் சிலவற்றை எடுத்துக் கொள்ளவும். இதனை அரை லிட்டர் தண்ணீரில் போட்டு 200 மில்லியாக குறையும் வரை நன்றாக கொதிக்க வைக்கவும். பின்னர் சூடு குறைந்த பின் வடிகட்டி அந்த நீரில் சிறிதளவு தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து குடிக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து குடித்து வரும்போது மூட்டு வலி குறைகிறது.

100 மில்லி அளவு நல்லெண்ணெய் எடுத்து அதில் 50 கிராம் அளவிற்கு கல் உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும். உப்பு எண்ணெயுடன் எண்ணெயில் நன்கு கரைந்தவுடன் அதனை ஒரு கண்ணாடி பாட்டிலில் ஊற்றி ஏழு நாட்களுக்கு காற்று புகாத வண்ணம் மூடவும். இறுக்கமாக மூடி வைத்திடுங்கள்.

பிறகு இந்த எண்ணெயை தேவையான அளவு எடுத்து லேசாக காய்ச்சி மூட்டு வலி ஏற்படும் போது தொடர்ந்து தடவி வரவும். சுமார் அரை மணி நேரத்திற்கு பிறகு சுடுதண்ணீரில் கழுவவும். இது மூட்டு பகுதியை சுற்றியுள்ள தசை மற்றும் இணைப்புகளில் ரத்த ஓட்டத்தை தூண்டி மூட்டு வலிக்கு நல்ல நிவாரணையாக செயல்படுகிறது.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • Tamannaah Bhatia and Vijay Varma part ways after years of dating காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!