தற்போதைய நிலவரப்படி, பிளாஸ்டிக் இல்லாத வீடே இல்லை என்று சொல்லக்கூடிய அளவிற்கு பெரும்பாலான வீடுகளில் பிளாஸ்டிக் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பிளாஸ்டிக் குறைவான விலையில் கிடைக்கிறது என்பதற்காக அதனை அதிக அளவில் வாங்கி நாம் பயன்படுத்துகிறோம். ஆனால் அதனால் விளையும் தீங்குகள் ஏராளம். காசு கொடுத்து நோயை வாங்குவது என்பதற்கு பிளாஸ்டிக் சிறப்பாக பொருந்தும்.
இந்த பிளாஸ்டிக் பொருட்களை அன்றாடம் பயன்படுத்துவதால், கடுமையான நோய்கள் பரவிகிறது. 100க்கு 80 பேர் தங்கள் வீடுகளில் பிளாஸ்டிக் பாட்டில்களை பயன்படுத்துகின்றனர்.
பிஸ்பெனால் ஏ (பிபிஏ) எனப்படும் ரசாயன கலவை பிளாஸ்டிக் பாட்டில்களை தயாரிப்பதில் பயன்படுத்தப்படுகிறது. பாலிகார்பனேட் பிளாஸ்டிக் தயாரிக்க BPA பயன்படுத்தப்படுகிறது. இதன் பயன்பாடு புற்றுநோய் மற்றும் ஹார்மோன் பிரச்சனைகளின் அபாயத்தையும் அதிகரிக்கிறது.
இது போன்ற நோய்களில் இருந்து உங்களை பாதுகாக்க இன்றே உங்கள் வீட்டிலிருந்து பிளாஸ்டிக் பாட்டில்களை தூக்கி எறியுங்கள். பிளாஸ்டிக் பாட்டில்களைப் போலவே, பிஸ்பெனால் ஏ (பிபிஏ) வீட்டிலும் பொதுவாகப் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் கொள்கலன்களில் பயன்படுத்தப்படுகிறது.
இந்த நிலையில், அதில் நாம் சேமித்து வைத்திருக்கும் பொருட்களின் மீது பிளாஸ்டிக் அதன் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஆகவே பிளாஸ்டிக் டப்பாக்களுக்கு பதிலாக இரும்பு அல்லது கண்ணாடி ஜார்களை பயன்படுத்த வேண்டும்.
உங்கள் வீட்டில் காய்கறிகளை வெட்டுவதற்கு பிளாஸ்டிக் சாப்பிங் போர்டு பயன்படுத்தினால், அதை இன்றே நிறுத்துங்கள். உண்மையில், பிளாஸ்டிக் சாப்பிங் போர்டில் இருக்கும் தீங்கு விளைவிக்கும் கூறுகள் உணவில் கலக்கின்றன. இதனால் நோய்கள் பரவுகின்றன. இது தவிர, சில பாக்டீரியாக்கள் காலப்போக்கில் வளர ஆரம்பிக்கின்றன. இது வயிறு தொடர்பான நோய்களை அதிகரிக்கிறது. அதற்கு பதிலாக ஒரு மரம் அல்லது கல் பலகையை பயன்படுத்தவும்.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.