ஒடிசாவில் மீண்டும் அதிர்ச்சி… எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீரென வெளியேறிய புகை ; பதறியடித்துப் போன பயணிகள்..!!

Author: Babu Lakshmanan
6 June 2023, 4:29 pm

ஒடிசாவில் செகந்திராபாத் – அகர்தலா எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீரென புகை வெளியேறியதால் பயணிகள் அச்சமடைந்தனர்.

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் கடந்த 2ம் தேதி 3 ரயில்கள் அடுத்தடுத்து மோதிய விபத்தில் 278 பேர் உயிரிழந்தனர். சிக்னலை மாற்றி போட்டதே விபத்துக்கு காரணம் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனிடையே, 7 பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்து இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கொத்து கொத்தாக மக்களின் உயிரை பறித்த இந்த ரயில் விபத்து சம்பவம் குறித்த அதிர்ச்சி மறைவதற்குள், அங்குள்ள பர்கார் மாவட்டத்தில் தனியார் சரக்கு ரயில் ஒன்று நேற்று தடம்புரண்டது. இதனால், பெட்டிகள் தடம் புரண்டு கவிழ்ந்தது.

இந்த நிலையில், ஒடிசாவில் செகந்திராபாத் – அகர்தலா எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து திடீரென வெளியேறிய புகையால் பரபரப்பு ஏற்பட்டது. அடுத்தடுத்த ரயில் விபத்துகளினால் அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பயணிகளுக்கு, ரயிலில் புகை வெளியேறிய சம்பவம் மேலும் பீதியை ஏற்படையச் செய்துள்ளது.

இதனால், புகை வெளியான பெட்டியில் தொடர்ந்து பயணிக்க பயணிகள் மறுப்பு தெரிவித்தனர். இதையடுத்து, அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, பிரச்சனை சீர்செய்யப்பட்டு, பின்னர் மீண்டும் ரயில் இயக்கப்பட்டது. இதனிடையே, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Bala and Kanja Karuppu relationship OFFICE BOY-யா வேல செஞ்ச பிரபல காமெடி நடிகர்…வாழ்க்கை கொடுத்த இயக்குனர் பாலா..!
  • Views: - 470

    0

    0