எங்க வீட்டு செல்லப்பிராணியை கண்டுபிடித்து தருபவர்களுக்கு ரூ.3 ஆயிரம் பரிசு : ஊர் முழுவதும் ஒட்டப்பட்ட போஸ்டர்!!

Author: Udayachandran RadhaKrishnan
6 June 2023, 7:56 pm

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் மலைப்பகுதியில் பல்வேறு மலை கிராமங்கள் அமைந்துள்ளது .இங்கு வசிக்கும் மக்கள் தங்களது இல்லங்களில் பிடித்தமான நாய் உள்ளிட்ட வளர்ப்பு விலங்குகளை வளர்த்து வருகின்றனர்.

இதில் ஒரு சிலர் வளர்ப்பு பிராணிகளுக்கு என தனி கவனம் செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் கொடைக்கானல் கல்லு குழி பகுதியில் இருந்த சாந்தி என்ற நாய் மே 24 முதல் காணவில்லை என கொடைக்கானலில் சில இடங்களில் மின் கம்பங்களில் நோட்டிஸ் ஒட்டப்பட்டு உள்ளது .

இதில் நாயின் பெயர் சாந்தி எனவும் கலர் கருப்பு மற்றும் வெள்ளை எனவும் இதனை கண்டு பிடித்து தரும் நபருக்கு ரூபாய் 3 ஆயிரம் ரூபாய் பரிசு என தொலைபேசி எண்ணுடன் சேர்த்து அச்சிடப்பட்டுள்ளது. நாய் காணவில்லை என கூறி நோட்டிஸ் ஒட்டிய சம்பவம் அனைவரையும் நகைப்படைய செய்துள்ளது .

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 448

    0

    0