கல்லறைத் தோட்டத்தில் இருந்து இளைஞர் சடலமாக மீட்பு… நெல்லையில் பயங்கரம்!!!

Author: Udayachandran RadhaKrishnan
7 June 2023, 3:48 pm

நெல்லை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள துதியின் கோட்டை தேவாலயத்தின் பின்புறம் இருக்கும் கல்லறை தோட்டத்தில் இருக்கும் கட்டிடம் ஒன்றில் வாலிபர் ஒருவர் ரத்த காயங்களுடன் உயிரிழந்த நிலையில் இருப்பதாக மேலப்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்ததை தொடர்ந்து அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்தபோது வாலிபர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.

இதனைத் தொடர்ந்து போலீசார் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன் கொலையான வாலிபர் யார் என்பது தொடர்பாகவும் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அதில் உயிரிழந்த வாலிபர் நெல்லை கே.டி.சி நகர் பகுதியைச் சேர்ந்த ஜோஸ் செல்வராஜ் என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து மேலப்பாளையம் போலீசார் அவர் தொடர்பான விசாரணையை துரிதப்படுத்திய நிலையில் பாளையங்கோட்டை பகுதியைச் சேர்ந்த முத்துஹரி என்பவரை கொலை செய்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக இவர் இருப்பது தெரியவந்தது.

அந்த கொலை வழக்கில் ஜோஸ் உட்பட கொலை வழக்கில் தொடர்புடைய நான்கு பேரும் இன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜரான பின்னர் இந்த கல்லறை தோட்டத்தில் மது அருந்த வந்ததாகவும் அப்போது இந்த கொலை சம்பவம் நடந்திருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இந்த நிலையில் கொலை சம்பவம் நடைபெற்ற இடத்தில் மாநகர காவல் துணை ஆணையாளர் அனிதா ஆய்வு நடத்தினார். இந்த விவகாரத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை யார் என்பது தொடர்பாக விசாரணை நடத்தி உடனடியாக பிடிக்கவும் உத்தரவிட்ட நிலையில் போலீசார் அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

திருநெல்வேலி நாகர்கோவில் நெடுஞ்சாலையில் மக்கள் போக்குவரத்து அதிகம் இருக்கும் பகுதியில் அமைந்திருக்கும் கல்லறை தோட்டத்தில் நடந்த கொலை சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

  • dhanush paid 25 lakhs hospital bill for his director illness நிஜமாகவே கர்ணன்தான்!… தன்னை வைத்து இயக்கிய இயக்குனருக்கு மாபெரும் உதவி செய்த தனுஷ்…