உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி… கருப்பு பட்டை அணிந்து விளையாடும் வீரர்கள்!!

Author: Udayachandran RadhaKrishnan
7 June 2023, 4:12 pm

ஒடிசா ரயில் விபத்தில் 288 பேர் உயிரிழந்தது நாட்டையே உலுக்கியது. இந்த நிலையில், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் இன்று நடைபெற்று வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அணியும், இந்திய அணியும் தனது கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடி வருகின்றனர்.

மேலும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி தொடங்குவதற்கு முன், ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய வீரர்கள் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தி, கையில் கருப்பு பட்டை அணிந்து அஞ்சலி செலுத்தினார்கள்.

  • lal salaam movie released in ott soon ஹார்ட் டிஸ்க் கிடைச்சிருச்சு? ஓடிடிக்கு தயாரானது லால் சலாம்!