சின்ன வயசுல இப்படி ஆகணும்னுதான் ஆசைப்பட்டேன்.. ஆனா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஓபன் டாக்..!

Author: Vignesh
8 June 2023, 3:40 pm

தமிழ் சினிமாவின் முன்னனி நடிகையான ஐஸ்வர்யா ராஜேஷ் டஸ்கி ஸ்கின் அழகை கொண்டு ஹீரோயினுக்கு ஏத்த பார்முலாவையே மாற்றி எழுதி யாரும் அசைக்க முடியாத இடத்தை பிடித்துவிட்டார். இவர் சன் தொலைக்காட்சியில் அசத்தப்போவது யாரு… நிகழ்ச்சித் தொகுப்பாளராக முதலில் தனது பணியை ஆரம்பித்தார். கலைஞர் தொலைக்காட்சியில் மானாட மயிலாட போட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றதை அடுத்து, நீதானா அவன் படத்தில் நடித்து அறிமுகமானார்.

aishwarya rajesh - updatenews360

அட்டகத்தி திரைப்படம் தான் இவரை பிரபலமாக்கியது. அதன் பின்னர் வடசென்னை, காக்கா முட்டை, ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் , தர்மதுரை உள்ளிட்ட திரைப்படங்கள் அவரது கெரியருக்கு மைல் கல்லாக அமைந்தது. சில நாட்களுக்கு முன்னர் வெளியான தி கிரேட் இந்தியன் கிச்சன் என்ற திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதையடுத்து கடைசியாக சொப்பன சுந்தரி திரைப்படம் வெளியாகி தோல்வி அடைந்தது.

அதையடுத்து இஸ்லாமிய பெண்களை இழுவுபடுத்தும் வகையில் ஃபர்ஹானா என்ற படத்தில் நடித்துள்ளதாக கூறி இப்படத்தை வெளியிடக்கூடாது என சர்ச்சைகள் பல எழுந்துள்ளது. இவ்வாறாக, தொடர்ந்து இப்படி தோல்வி படங்களில் நடித்து வருவதால் ஐஸ்வர்யா ராஜேஷ் கோலிவுட்டில் ஒதுக்கப்படும் நடிகையாக தற்போது இருக்கிறார்.

இதற்கெல்லாம் காரணம் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த லீட் ரோல்களில் மட்டுமே நடிப்பேன் என அடம் பிடிப்பது தானாம். எல்லாரும் நயன்தாரா மாதிரியே ஆகணும்னு ஆசைப்பட்டால் எப்புடி? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.

aishwarya rajesh - updatenews360

இதனிடையே, தற்போது இவர் தனியார் தொலைக்காட்சிக்கு அழைத்துள்ள பேட்டி ஒன்றில் சினிமா துறையில் நடிக்கவில்லை என்றால் உங்களது விருப்பம் என்னவாக இருக்கும் என்ற கேள்விக்கு நிச்சயமாக ஹவுஸ் ஒய்ஃப் ஆக தான் ஆகியிருப்பேன் என்றும், சிறுவயதில் இருந்து இந்த ஆசை தனக்கு இருந்ததாகவும் செய்து கொண்டு வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட வேண்டும் என்று ஆசை இருந்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த ஆசை தனக்கு 18 வயதில் இருந்து இருந்ததாகவும் 25 ஆனவுடன் உடனே திருமணம் செய்து செட்டில் ஆகிவிட வேண்டும் என்று எண்ணியதாகவும் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

  • Mufasa The Lion King Tamil Dubbed“முஃபாசா த லயன் கிங்” மிரட்டலாக டப்பிங் கொடுத்துள்ள தமிழ் நடிகர்கள்..!
  • Views: - 497

    0

    0