100 வேலைதிட்டத்தில் முறைகேடு… மருதூர் ஊராட்சி மன்ற தலைவர் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்குப்பதிவு!!
Author: Babu Lakshmanan9 June 2023, 11:31 am
கோவை ; கோயம்புத்தூர் மாவட்டம் காரமடை மருதூர் ஊராட்சி மன்ற தலைவர் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கோயம்புத்தூர் மாவட்டம் காரமடை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மருதூர் ஊராட்சி மன்றத் தலைவராக இருப்பவர் பூர்ணிமா( 40). இவர் தனியார் நிறுவன ஊழியர்கள், நில உரிமையாளர்கள் உள்பட தகுதியற்ற நபர்களுக்கு நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் அடையாள அட்டை வழங்கியதாகவும், இதன் மூலம் அரசிற்கு பல லட்ச ரூபாய் நிதி இழப்பு ஏற்படுத்தியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியருக்கும், கோயம்புத்தூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கும் அடுத்தடுத்து புகார்கள் சென்றன.

இதன் அடிப்படையில் கோயம்புத்தூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸார், மருதூர் ஊராட்சி மன்றத் தலைவர் பூர்ணிமா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.