பாஜகவுக்கு திடீர் பாராட்டு…. செய்தியாளர்கள் சந்திப்பில் நன்றி கூறிய அமைச்சர் உதயநிதி!!!

Author: Udayachandran RadhaKrishnan
9 June 2023, 4:59 pm

சென்னை செம்மஞ்சேரியில் உள்ள தனியார் கல்லூரியில் சுமார் 400 பேர் கலந்து கொள்ளும் மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டியை தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் துவக்கி வைத்தார்.

பின்னர் செய்தியார்களிடம் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் :- கேலோ இந்தியா போட்டி நடைபெறும் இடங்களை ஆய்வு செய்ய நிர்வாகிகள் வந்துகொண்டிருக்கிரார்கள். முதல் முதலாவதாக தமிழகத்தில் இந்த போட்டியை நடத்த இந்த வாய்ப்பை கொடுத்த மத்திய விளையாட்டு துறை அமைச்சர் அனுராத் தாகூர், மற்றும் ஒன்றிய அரசுக்கு உதயநிதி ஸ்டாலின் நன்றி தெரிவித்தார்.

செஸ் ஒலிம்பியாட் போட்டி சிறப்பாக நடத்தியதுபோல் வரவேர்க்கூடிய ஆக்கி ஏசியன் போட்டியையும் நடத்த உள்ளோம் அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

கேலோ இந்தியவின் அனைத்து நிகழ்ச்சிகளின் துவக்க விழா, நிறைவிழாகளில் பிரதமர் கலந்து கொண்டுதான் இருக்கிறார் நாங்களும் கண்டிப்பாக அழைப்போம்.

சென்னை கோவை மதுரை அங்குள்ள வசதிகளை பார்வையிட்டு முதற்கட்ட கூட்டத்தில் பேசியுள்ளோம் தொடர்ந்து நடைபெறும் கூட்டங்களில் முடிவு செய்யப்படும்.

தங்களுக்கு துணை முதல்வர் தரப்போவதாக தகவல்கள் வந்துள்ளது என்ற செய்தியாளர்களிடம் கேள்விக்கு :- எனக்கே தகவல் தெரிய வில்லை, நீங்கள் சொல்லி தான் தெரிகிறது என்று கூறிவிட்டு சென்றார்.

  • Ajith Kumar Team Racing Challenges துபாய் ரேஸில் பல திக் திக் சவால்ககளை எதிர்கொள்ள போகும் அஜித் குழுவினர்… 24 மணி நேரம் எப்படிங்க..!
  • Views: - 347

    0

    0