தறிகெட்டு ஓடிய தனியார் பேருந்து.. பிரேக் பிடிக்காததால் ஏற்பட்ட உயிர் பலி : ஷாக் சிசிடிவி காட்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
10 June 2023, 7:09 pm

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் நகர் பகுதியில் உள்ள ஐந்து முனை சந்திப்பில் இன்று காலையில் விழுப்புரத்திலிருந்து திருக்கோவிலூர் மார்க்கமாக வந்த MKMS-எனும் தனியார் பேருந்தில் பிரேக் செயலிழந்ததால் ஐந்து முனை சந்திப்பில் உள்ள மொபைல் கடை ஒன்றின் மீது நேராக மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் ஐந்து முனை சந்திப்பில் கல்லூரி மாணவர்களுக்காக காத்திருந்த பேருந்து மற்றும் சாலை ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோ நான்கு இருசக்கர வாகனங்கள், சாலையோரம் வைக்கப்பட்டிருந்த பழகடைகள் மீது மோதி பின்னர் நேராக இருந்த செல்போன் கடை மீது தனியார் பேருந்து நின்றது.

இந்த விபத்தில் சாலையோரமாக நின்று கொண்டிருந்த சந்தைப்பேட்டை பகுதியை சேர்ந்த கவுஸ்பாஷா, முதியவர் படுகாயம் அடைந்து திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது, ஆனாலும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக அவர் உயிரிழந்தார்.

மொபைல் கடை மீது பேருந்து மோதும் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

  • Kayadu Lohar Visit Kalahasti Temple Crowd Gathered பவ்யமாக பழத்தை எடுத்து கொடுத்த கயாடு லோஹர்… மொத்தக் கூட்டமும் சுத்தி வந்திருச்சே!