17 பெண்களின் வாழ்க்கையை சீரழித்த வைரமுத்து… சின்மயியை தொடர்ந்து பிரபல பாடகி பகீர் குற்றச்சாட்டு!
Author: Shree10 June 2023, 9:18 pm
தமிழ் சினிமாவின் பிரபல பாடலாசிரியரான வைரமுத்துவுக்கு சமீபத்தில் கள்ளிக்காட்டு இதிகாசம் புதினத்துக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றார். அதற்காக அவரை கௌரவிக்கும் விதத்தில் தமிழக அரசின் சார்பில் ‘கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ் வீடு வழங்கப்படும் என முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இதற்கு பலரும் எதிர்ப்புகள் தெரிவித்து விமர்சித்து வருகின்றனர். “சென்னை பெசன்ட் நகர், திருவான்மியூர் இந்திரா நகர் பகுதிகளில் இன்று வீடு வாங்குவதும், வீடு கட்டுவதும் ஓரளவு வசதி படைத்தவர்களால் கூட கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத காரியம். அப்படி இருக்கும்போது எதற்காக வைரமுத்துவுக்கு தமிழக அரசின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ஒரு வீட்டை ஒதுக்கவேண்டும் என மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதற்கு சின்மயி உள்ளிட்டோர் கடும் எதிர்ப்புகள் தெரிவித்து வந்த நிலையில் தற்போது இது தொடர்பாக பாடகி புவனா சேஷன் நேஷனல் பேட்டி ஒன்றில், இதுவரை 17 பெண்கள் வைரமுத்துவால் பாலியல் தொல்லை அனுபவித்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர். அவர்கள் அனைவரும் தைரியமாக தங்களுடைய பெயரையும் முகத்தையும் வெளி உலகத்திற்கு சொல்லி இருக்கின்றார்கள்.
நான் இப்போது அதை பற்றி கூறுவதற்கு காரணம், என்னை போல் இளம் பாடகர்களின் கனவுகள் நசுக்கப்படுவதை நான் விரும்பவில்லை.எனக்கு நேர்ந்ததைப் போல பிற பெண்களுக்கும் நடக்க நான் விரும்பவில்லை. வைரமுத்து மீதான குற்றச்சாட்டுகளை சின்மயி முன் வைத்ததை நெட்டிசன்கள் பலரும் திட்டி விமர்சித்திருக்கிறார்கள்.
ஆனால், உண்மையில் சின்மயியை பாராட்டியே ஆகவேண்டும். சின்மயின் தைரியம் என்னை வியக்க வைக்கிறது. இது மிகவும் கடினமான ஒன்று தான். இந்த சம்பவத்தில் பல பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால், இது குறித்தான விசாரணை இன்னும் நடத்தப்படவில்லை. ஆனால் தொடர்ந்து குற்றவாளி கௌரவிக்கப்பட்டு வருவது என்பது தான் வேதனை அளிக்கிறது என்று கூறியிருக்கிறார்.