என் மனைவியை அரை நிர்வாணமாக்கி அடிச்சுட்டாங்க… காஷ்மீரில் மண்டியிட்டு CM, டிஜிபிக்கு கோரிக்கை வைத்த தமிழக ராணுவ வீரர்!

Author: Udayachandran RadhaKrishnan
11 June 2023, 11:36 am

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே படவேடு கிராமத்தை சேர்ந்த ராணுவ வீரர் பிரபாரகன். இவரது மனைவி கீர்த்தி படவேடு ஸ்ரீ ரேணுகாம்பாள் ஆலயம் எதிரில் குன்னத்துர் கிராமத்தை சேர்ந்த ராமு என்பவரின் கடையை மேல் வாடகைக்கு எடுத்து பேன்ஸி ஸ்டோர் நடத்தி வந்துள்ளார். இதனிடையே கடையை காலி செய்ய ராமு வற்புறுத்தியதாகவும், கடைக்கு கொடுத்த 16 லட்சம் ரூபாய் பணத்தை திருப்பி கொடுக்க ராணுவ வீரர் பிரபாகரனின் மனைவி ராமுவை கேட்டதாக தெரிகிறது. இதில், நேற்று முன்தினம் ராமு என்பவர் சிலருடன் வந்து பேன்ஸி ஸ்டோரில் இருந்த பொருட்களை வீசி எரிந்து கடையை காலி செய்துள்ளதாக தெரிகின்றன.

கடையை காலி செய்ய பல நாட்கள் தவணை கொடுத்தும் காலி செய்ய மறுத்ததால் கடையில் உள்ள பொருட்களை அப்புறப்படுத்தியதாகவும் அப்போது கீர்த்தியின் சகோதரர் ஜீவா என்பவர் ராமுவை கத்தியால் தாக்கியதாகவும், இந்த சம்பவத்தில் ராணுவ வீரர் மனைவி கீர்த்தியும் தாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இருதரப்பினரும் சந்தவாசல் காவல் நிலையத்தில் பரஸ்பர புகார் அளித்துள்ள நிலையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே தன் மனைவி கீர்த்தி மீது எதிர்தரப்பினர் தாக்குதல் நடத்தியதாகக் கூறி ராணுவ வீரர் பிரபாகரன் ஜம்முவில் இருந்து தமிழக டிஜிபி சைலேந்திரபாபுவுக்கு வீடியோ மூலம் புகார் தெரிவித்தார்.

அந்த வீடியோவில், “திருவண்ணாமலை மாவட்டம் படவேடு கிராமத்தில் எனது மனைவி கடை வைத்துள்ளார். அந்த இடம் அறநிலையத் துறைக்கு சொந்தமானது. அந்த இடத்தை காலி செய்யக் கோரி என் மனைவியை ரத்தம் வரும்படி அடித்துள்ளனர். 120 பேர் சூழ்ந்துகொண்டு தாக்கியுள்ளனர். இதுதொடர்பாக எஸ்.பிக்கு புகார் அனுப்பியுள்ளேன். நடவடிக்கை எடுக்கிறேன் என்று கூறியுள்ளனர்.

என் மனைவியை அரை நிர்வானமாக்கி மிகவும் மோசமாக அடித்து இருக்கிறார்கள் இது எந்த உலகத்தில் நியாயம் என்று கேட்டு காப்பாற்ற கூறி காஷ்மீரில் பணியில் இருக்கும் இராணுவ வீரர் மண்டியிடும் பரிதாப நிலை @tnpoliceoffl உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உள்ளூர் காவல் நிலையத்தில் கூறியதில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். போகிற இடத்தில் எல்லாம் அடிக்கிறார்களாம். என் மனைவியை அரை நிர்வாணமாக்கி அடித்திருக்கிறார்கள். எப்படியாவது என் மனைவியை காப்பாற்றுங்கள்.. ராணுவ வீரனாக இருந்துகொண்டு கீழே விழுந்து கேட்கக் கூடாது. ஆனாலும் கேட்கிறேன். என் குடும்பத்தினரை காப்பாற்றுங்கள்” என்று மண்டியிட்டு கூறுகிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

  • Vikraman wife press meet அது ‘அதற்காக’ எடுக்கப்பட்ட வீடியோ.. விக்ரமன் மனைவி பரபரப்பு பேட்டி!
  • Close menu