தியேட்டரில் அந்த இடத்தில் கை வைத்து அசிங்கமாக நடந்துக்கொண்டார் – தனுஷ் பட நடிகை பகீர்!
Author: Shree12 June 2023, 10:44 am
ஸ்டார் கிட்ஸ் நடிகையான சோனம் கபூர் பாலிவுட்டின் நட்சத்திர நடிகரான தந்தை அனில் கபூர் என்ற பிராண்டை வைத்து சினிமாவில் நுழைந்தார். இவரது திறமைகள் ஏதும் பெரிதாக பேசப்படவில்லை என்றாலும் அவரின் அப்பா பெயரோடு சல்மான் கான், ரன்பீர் கபூர் போன்ற பெரிய ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்புகள் சுலபமாக கிடைக்க வெகு சீக்கிரத்தில் பிரபலம் ஆனார்.
ஆனால், தொடர்ந்து அவரால் நிலைத்து மார்க்கெட் பிடிக்கமுடியவில்லை . இதனால் பிரபல தொழிலதிபர் ஆனந்த் அஹுஜா என்பவரை கடந்த 2018ம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார். இதனிடையே சோனம் கபூர் தனுஷுக்கு ஜோடியாக 2013ம் ஆண்டு வெளியான ராஞ்சனா திரைப்படத்தில் நடித்து தமிழ் மக்களுக்கும் பிரபலம் ஆனார்.
இந்நிலையில் நடிகை சோனம் கபூர், தனக்கு நடந்த harassment குறித்து பேசியுள்ளார். அதாவது, நான் 13 வயதாக இருக்கும் போது தியேட்டருக்கு நண்பர்களுடன் சென்று இருந்தேன். அப்போது முகம் தெரியாத நபர் ஒருவர் என் மார்பின் மீது கை வைத்து விட்டு ஓடிவிட்டார். அந்த நிமிடம் என் வேதனையை விளக்க முடியாத அளவுக்கு நான் மனம் வருந்தி அழுதேன் என உருக்கமாக கூறியுள்ளார். பெரிய ஸ்டார் நடிகரின் மக்களுக்கே இப்படி ஒரு கொடுமை நடந்திருக்கிறதா? என நெட்டிசன்ஸ் ஷாக் ஆகியுள்ளனர்.