வைரமுத்து கிட்ட உனக்கு என்ன தேவையோ வாங்கிட்டு இப்ப இப்படி பேசறியா.. சின்மயியை சீண்டிய நடிகை!
Author: Vignesh12 June 2023, 4:45 pm
பிரபல பாடகியும், டப்பிங் கலைஞருமான சின்மயி, நடிகரும் இயக்குனருமான ராகுல் ரவீந்திரனை 2014-ல் திருமணம் செய்து கொண்டார். ரவீந்திரன் வணக்கம் சென்னை படத்தில் இரண்டு கதாநாயகர்களில் ஒருவராக நடித்திருப்பார்.
சமூக வலைதளங்களில் அடிக்கடி சர்ச்சையான கருத்துகளால் ரசிகர்களின் கவனம் ஈர்ப்பவர் தான் பாடகி சின்மயி. தனது முதல் பாடலிலேயே சிறந்த பாடகி என்ற முத்திரையை பதித்தார் சின்மயி, அடுத்தடுத்து பல படங்களில் ஏ.ஆர் ரஹ்மான் இசையில் தொடர்ச்சியாக பாடல்களை பாடினார். இசைத் துறையில் தனக்கென தனி முத்திரை பதித்துள்ளார்.
இதனிடையே, பாடலாசிரியர் வைரமுத்து தன்னிடம் பாலியல் ரீதியாக தவறாக நடக்க முயன்றதாக குற்றம் சாட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து வைரமுத்துவிற்கு எதிரான கருத்துக்களை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார் சின்மயி.
பலமுறை வைரமுத்து குறித்து மோசமான கருத்துக்களை சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டு அவரை திட்டியுள்ளார். இந்நிலையில், சின்மயிடம் செய்தியாளர்கள், அப்போதே சொல்லி இருக்கலாமே என்றும் அவரை திருமணத்திற்கு அழைத்து அவரிடம் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்க வேண்டிய அவசியம் என்ன என்றும் கேள்வியை எழுப்பிய நிலையில், பெரிய அரசியல் பலம் வைரமுத்துவிடம் இருந்ததால் அதை அப்போது கூற முடியவில்லை என்று சின்மயி பதிலளித்து இருந்தார். சின்மயிக்கு பிறகு தான் பல நடிகைகள் மீ டூ மூலம் தங்களுக்கு நடந்த பாலியல் தொல்லைகளை வெளியில் கூறி வந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மீடு குறித்தும் அதன்மூலம் புகார் அளிப்பவர்கள் குறித்து பிரபல நடிகை வெண்ணிற் ஆடை நிர்மலா பேட்டியொன்றில் வெளுத்து வாங்கி இருக்கிறார்.
அதில் அவர், அந்தகாலத்தில் மீ டூ மாதிரியான பிரச்சனைகள் இல்லை என்றும் மீ டூ என்பது ஒரு கன்றாவியான விசயம் என்றும், ஏதோ தனக்கு ஒரு வேலை நடக்க வேண்டும் என்று தானே அதற்கு ஒத்துக்கொண்டு செல்கிறார்கள்.
அந்த மனிதர் பேரன் பேத்திகளுடன் ஒரு நல்ல அந்தஸ்த்தில் இருக்கிறார். இப்போதைக்கு வந்து பேசுகிற அவர்கள் ஏதோ ஒரு விதத்தில் வேலை நடக்க வேண்டும் என்று போனவர்கள் அப்போதே என்னவோ செய்துவிட்டு அப்பவே ஏன் பேசாமல் இருந்தார்கள் என்று சரமாறியாக கேட்டு வெளுத்து வாங்கியிருக்கிறார் வெண்ணிற ஆடை நிர்மலா.