ஓவரா வாய் பேசிய கீர்த்தி சுரேஷ்… கழுத்தை நெரித்த சூப்பர் ஸ்டார் – வைரல் வீடியோ!
Author: Shree13 June 2023, 10:08 am
கீர்த்தி சுரேஷுக்கு அறிமுகமே தேவையில்லை அந்த அளவுக்கு பெரிய நடிகையாகி விட்டார் இருந்தாலும் இவரின் ஆரம்ப கால கட்டத்தை சற்று அலசிப் பார்த்தால், 2015- ஆம் ஆண்டில் விக்ரம் பிரபுவுடன் “இது என்ன மாயம்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானாலும், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் படம் தான் வேற லெவலில் கீர்த்தி சுரேஷை உயர்த்தியது.
அதன் பிறகு மீண்டும் சிவகார்த்திகேயன் உடன் ரெமோ படத்தில் நடித்து இளைஞர்கள் மனதை கொள்ளையடித்தார். அதன் பிறகு தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகைகளில் ஒருவராக வந்தா கீர்த்தி சுரேஷ். அதன் பிறகு விஜய், விஷால், சூர்யா, தனுஷ், விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பிரபலம் அடைந்தார். சில வருடங்களுக்கு முன்பு கூட நடிகையர் திலகம் படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்கினார்.
இதனிடையே தனது உடல் எடையை குறைத்து ஸ்லிம்மிட் தோற்றத்திற்கு மாறியுள்ள கீர்த்தி சுரேஷ் கடைசியாக நானிக்கு ஜோடியாக தசரா படத்தில் நடித்திருந்தார். தமிழில் மாமன்னன் படத்தில் நடித்துள்ளார். அஜித் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் ஆன வேதாளம் படம் தெலுங்கில் ரிமேக் ஆகி வருகிறது. இப்படத்தில் மெகா சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி, கீர்த்தி சுரேஷ், தமன்னாவும் நடித்துள்ளனர்.
இந்நிலையில் இப்படத்தின் பாடல் ஷூட்டிங்கில் சிரஞ்சீவியிடம் அதிகப்பிரசங்கித்தனமாக பேசிக்கொண்டிருந்த கீர்த்தி சுரேஷை சிரஞ்சீவி நாக்கை கடித்து கழுத்தை நெரித்த வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ: