அட்டகாசமாக ஆரம்பமாக போகும் ‘பிக்பாஸ் சீசன் 7’.. வெளியான புதிய தகவல்..!
Author: Vignesh13 June 2023, 11:19 am
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரம்மாண்ட நிகழ்ச்சி பிக் பாஸ் இந்த நிகழ்ச்சியில் 6 சீசன்கள் தற்போது முடிந்துள்ளது. ஆரவ், ரித்விகா, முகேன்ராவ்,ராஜு, அசிம் உள்ளடோர் இந்நிகழ்ச்சியில் பிக் பாஸ் டைட்டில் ஜெயித்துள்ளனர்.கமல் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியின் 7வது சீசன் துவங்கும் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சி முதன் முதலாக அமெரிக்காவில் ஆரம்பிக்கப்பட்டு அது அப்படியே இந்தி, மராத்தி, கன்னடம், மலையாளம், தமிழ் என பல மொழிகளில் ஆரம்பமானது. இந்த நிகழ்ச்சியின் நோக்கமே நூறு நாட்கள் ஒரே வீட்டில் டிவி செல்போன் போன்ற எந்தவித தகவல் தொடர்பு சாதனமும் இல்லாமல் பொதுமக்களின் வாக்குகளை வைத்து தாக்குப் பிடிக்கும் போட்டியாளர்களை வெற்றியாளர்களாக கருதப்படுவார்கள்.
இவ்வாறு இறுதிப்போட்டி வரை வந்து வாக்குகள் அடிப்படையில் வெற்றியாளர்களுக்கு முடி சூட்டப்படுவார்கள். அது போல தான் தமிழிலும் 6 சீசன்கள் முடிந்துள்ள நிலையில், ஏழாவது சீசன் வெற்றிகரமாக ஆரம்பிக்க உள்ளது.
பிக் பாஸில் ஏழாவது சீசனுக்காக காத்துக் கொண்டிருக்கும் ரசிகக்ளுக்கு ஒரு சூப்பரான அப்டேட் தற்போது வந்துள்ளது. அதாவது பிக் பாஸ் ஏழாவது சீசன் அடுத்த மாதம் ஜூலை 2 அல்லது நான்காவது வாரத்தில் தொடங்கப்படும் என நம்பகமான தகவல் மூலம் வெளியாகி உள்ளது.
இந்த சீசனில் போட்டியாளர்கள் எவ்வாறு தேர்வு செய்யப்படுவார்கள் என்று பார்த்தால் இரண்டு செலிபிரிட்டிகள் மக்களுக்கு பரிச்சயம் இல்லாதவர்கள், இரண்டு செலிபிரிட்டிகள் சின்னத்திரையை சேர்ந்த நடிகர்கள், தொகுப்பாளர்கள் மற்றும் செய்தி வாசிப்பாளர்கள் இரண்டு பேர், பொதுமக்களில் இருந்து மூன்று பேர் மாடலிங் துறையை சேர்ந்து இரண்டு பேர், சோசியல் மீடியா பிரபலங்கள் இரண்டு பேர், திருநங்கை ஒன்று, சமூக சேவை அல்லது அரசியலை சேர்ந்த இரண்டு பேர் பேச்சாளர்கள் இரண்டு பேர், அயல் நாட்டவர்கள் இரண்டு பேர் மற்றும் நடனம் ஆடுபவர்கள் இரண்டு பேர் என தேர்வு செய்யப்பட உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது.