அடப்பாவமே…. நயன்தாராவுக்கு அந்த விஷயம் தெரியாதா? பாவம் விக்கி – சீக்ரெட்டை போட்டுடைத்த ஆர்யா!

Author: Shree
13 June 2023, 11:15 am

தமிழ் சினிமாவின் டாப் நடிகையான நயன்தாரா மலையாள குடும்பத்தில் பிறந்து வளர்ந்து அங்குள்ள லோக்கல் சேனல் ஒன்றில் ஆங்கராக பணிபுரிந்து அதன் பின்னர் கிடைத்த படவாய்ப்புகளை மிஸ் பண்ணாமல் நடித்து மிகப்பெரிய மார்க்கெட் பிடித்து இன்று டாப் நடிகை என்ற அந்தஸ்தில் இருக்கிறார்.

முதன் முதலில் 2003 ஆம் ஆண்டு மனசினகாரே என்ற மலையாள மொழித் திரைப்படம் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமான நயன்தாரா, 2005 ஆம் ஆண்டு ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகம் ஆனார். தமிழில் அறிமுகமான முதல் படத்திலே பரவலான ரசிகர்கள் வட்டாரத்தை அதிகரித்துக்கொண்டார்.

தொடர்ந்து தமிழில் நடித்து சிறந்த கதைகளை தேர்வு செய்து ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளில் நடித்து முன்னணி நடிகையாக மார்க்கெட் பிடித்தார். இதனிடையே விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். அவர்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் நடிகர் ஆர்யா நிகழ்ச்சி ஒன்றில் நயன்தாரா குறித்து பேசியபோது, நயன்தாராவுடன் லாங் ட்ரைவ் செல்லவேண்டும் என ஆசையாக உள்ளது. ஆனால் அவருடன் சென்றால் நான் தான் கார் ஓட்டவேண்டும். ஏனென்றால் அவருக்கு கற் ஓட்ட தெரியாது என கூறினார். இதை கேட்டு ரசிகர்கள் செம ஷாக் ஆகிவிட்டனர். என்னது லேடி சூப்பர் ஸ்டாருக்கு காரே ஓட்ட தெரியாதா? என ஆச்சர்யத்துடன் கேட்டு வருகின்றனர்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 418

    0

    2