14 மணி நேரம் மூச்சு முட்ட அந்த இயக்குனர்.. ரகுல் ப்ரீத் சிங் எதிர்கொண்ட சவால்..!
Author: Vignesh13 June 2023, 12:31 pm
தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் பிஸியாக நடித்து வரும் நடிகை ரகுல் ப்ரீத் சிங். தமிழில் கெளதம் கார்த்திக்கு ஜோடியாக 2014 – இல் வெளியான படம்தான் ‘என்னமோ ஏதோ’ திரைப்படம்.
அந்த படத்தில்தான் அவர் முதல் முறையாக திரைத்துறைக்கு அறிமுகமாகிறார். அந்த படம் சரியாக போகா விட்டாலும், இந்த படத்திற்கு பின் கார்த்தியின் ஜோடியாக நடித்த ‘தீரன் அதிகாரம் ஒன்று’ மிகப்பெரிய வெற்றி பெற்றது.
பொதுவாகவே நடிகை ரகுல் பிரித் சிங்கின் ஒவ்வொரு அசைவும், கண்பார்வையும், எக்ஸ்பிரஷன்சும் ரசிகர்களை சுண்டி இழுக்கும் வகையில் இருக்கும், அதனால் இவருக்கு நிறைய ரசிகர்கள்.
இந்நிலையில் இந்தியன் 2 தெலுங்கில் ஐ லவ் யூ போன்ற படங்களில் நடித்து வருகிறார். ஐ லவ் யூ ரொமாண்டிக் திரில்லர் படம் வரும் 16ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் ஒரு காட்சியில் தண்ணீருக்கு அடியில் இரண்டு நிமிடங்கள் மூச்சு அடைக்கியபடி இருக்க வேண்டுமாம் அதற்காக ரகுல் பிரீத் சிங் கடுமையான பயிற்சி மேற்கொண்டாராம்.
மேலும், இதுகுறித்து ரகுல் பிரித் சிங் கூறுகையில், ஸ்கூபா பயிற்சியாளர் ஜஹான் அடன்வாலா, தண்ணீருக்குள் மூச்சை அடக்குவதற்கு தனக்கு பயிற்சி கொடுத்ததாகவும், இந்த ஒரு காட்சிக்காக தான் மதியம் ரெண்டு மணியிலிருந்து அதிகாலை நாலு மணி வரை தண்ணீருக்குள்ளேயே இருந்ததாகவும், கடும் குளிராக இருந்த போதும் ஒவ்வொரு ஷாட் முடிந்ததும் தன் மீது வெதுவெதுப்பான நீரை ஊற்றியதாகவும், தண்ணீரில் உள்ள குளோரின் காரணமாக தன் கண்கள் எறிந்ததாகவும், இருந்தாலும் அந்த சவாலை எதிர்கொண்டு நடித்ததாக தெரிவித்துள்ளார்.