இரவு பார்ட்டியில் ஆட்டம்… வைரலாகும் ரம்யா கிருஷ்ணனின் குத்தாட்ட வீடியோ..!

Author: Vignesh
13 June 2023, 12:51 pm

தென்னிந்தியத் திரைப்பட நடிகையான ரம்யா கிருஷ்ணன் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய 4 மொழிகளில் நடித்துள்ளார். 80ஸ் , 90ஸ் களில் முன்னணி நடிகர்களின் பல படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தவர் நடிகை ரம்யா கிருஷ்ணன்.

இடையில் மலையாளம், கன்னடம், ஹிந்தி என வாய்ப்புகள் தேடி வர, ரம்யாவின் புகழ் மேலும் விரிவடைந்தது. இளம் நடிகர்களான சிம்பு, ஷாம், நரேஷ் ஆகியோருடன் குத்தாட்டம் போட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர். கவர்ச்சிக் கதாநாயகியாகவும், நடிப்பை வெளிப்படுத்தும் கதாபாத்திரங்களிலும் நடித்தார். பட வாய்ப்புகள் குறைந்த சமயத்தில் வெளியான பாகுபலி படம் மீண்டும் அவரை பிசியாக வைத்துள்ளது.

ramya krishnan - updatenews360

போதாக்குறைக்கு, ஜெயலலிதாவின் நிஜ வாழ்க்கையை மையப்படுத்தி வெளிவந்த Queen Web series Hit அடிக்க, அம்மணியை பயங்கர Happy. தொடர்ந்து தெலுங்கு , தமிழ் என படு பிசியாக நடித்து வருகிறார். இதனிடையே தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் நடுவராக இருந்து வருகிறார். தற்போது 52 வயதாகும் ரம்யா கிருஷ்ணன் இன்னும் அதே இளமையோடு அழகாக இருக்கிறார்.

ramya krishnan - updatenews360

மறைந்த பிரபல கன்னட நடிகர் அம்பரீஷின் மகன் அபிஷேகின் திருமணத்தில் பங்கேற்று பல தென்னிந்திய பிரபலங்களும் நடிகர் நடிகைகளும் வாழ்த்து தெரிவித்தனர். இந்த திருமணத்தில் நடந்த இரவு பார்ட்டியில் நடிகை ரம்யா கிருஷ்ணனும் கலந்து கொண்டார்.

அப்போது கன்னட நடிகரும் கேஜிஎப் படத்தின் கதாநாயகனுமான யஷ்ஷுடன் சேர்ந்து, ரம்யா கிருஷ்ணன் குத்தாட்டம் போட்டுள்ளார். இந்த பார்ட்டியில் அனைவரும் ஆட்டம் போட்ட வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

  • Ajith's Son Advik Wins Go Kart Race குட்டி ரேஸர் ரெடி…சென்னையில் நடந்த போட்டியில் மாஸ் காட்டிய அஜித் மகன்…!