ராஜீவ் காந்தி நினைவகம் மீது தாக்குதல் நடத்த சதியா..? தூக்கி வீசப்பட்ட சூட்கேஸ்… விரைந்து வந்த போலீசாருக்கு அதிர்ச்சி…!!

Author: Babu Lakshmanan
13 June 2023, 4:12 pm

காஞ்சிபுரம் ; ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள ராஜீவ்காந்தி நினைவகம் முன்பு வீசப்பட்ட மர்ம சூட்கேஸால் பரபரப்பு நிலவி வருகிறது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவகம் உள்ளது. இந்த நிலையில் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வேலூர் நோக்கி சென்ற கார் ஒன்று ராஜீவ் காந்தி நினைவுகள் முன்பு நின்றுள்ளது. அதிலிருந்து இறங்கிய சில நபர்கள் ஒரு சூட்கேஸை, காரிலிருந்து எடுத்து நினைவகம் முன்பு வீசிவிட்டு உடனே கிளம்பி சென்று விட்டனர்.

பாதுகாப்பு பணியில் இருந்த மத்திய பாதுகாப்பு துறையினர் மெட்டல் டிடெக்டர் வைத்து சோதனை இட்டதில் எச்சரிக்கை ஒலி எழும்பியுள்ளது. இதனால் அச்சமடைந்த சிஆர்பிஎப் போலீசார் உடனடியாக ஸ்ரீபெரும்புதூர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

அதன் பேரில், ஸ்ரீபெரும்புதூர் டிஎஸ்பி சந்திரதாசன் தலைமையிலான போலீசார் தடவியல் நிபுணர்களுக்கு தகவல் கொடுத்துவிட்டு சூட்கேஸ் அருகே யாரும் பொதுமக்கள் நெருங்காத வகையில் பேரிகார்ட் மூலம் தடுப்புகளை கொண்டு சிஆர்பிஎப் போலீசார் பாதுகாப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

தடவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சோதனை செய்த பின்னரே, சூட்கேஸில் வெடிகுண்டு ஏதேனும் உள்ளதா அல்லது காலி சூட்கேசா என தெரியவரும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

  • china decided to ban american movies shocking marvel fans சூப்பர் ஹீரோ திரைப்பட நிறுவனங்களுக்கு ஆப்பு வைக்கப்போகும் சீனா?