எங்களுக்கு தான் அடுத்த Divorce….திருமணம் ஆன 3 மாதத்திலே பசங்க பட ஹீரோ கிஷோர் வேதனை!

Author: Shree
14 June 2023, 9:10 am

கடந்த 2009ஆம் ஆண்டு பள்ளிப்பருவ பிள்ளைகளையும் அவர்களின் வளர்ப்பும் குறித்து வெளியான படம் ” பசங்க ” பாண்டிராஜ் இயக்கி இருந்த இப்படத்தில் தான் விமல் அறிமுகமானார். இதில் குழந்தை நட்சத்திரமாக அன்புக்கரசு வெள்ளைச்சாமி என்ற கதாபாத்திரத்தில் கிஷோர் நடித்திருந்தார்.

அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து கோலிசோடா, சகா போன்ற ஒரு சில படங்களில் நடித்தார். இதனிடையே பிரபல சீரியல் நடிகை ப்ரீத்தியை காதலித்து கொண்டிருப்பதாக சமூகவலைத்தளத்தில் வெளியிட்டார்.

ப்ரீத்தி லட்சிமி கல்யாணம், வள்ளி, கேளடி கண்மணி, தெய்வம் தந்த வீடு, வானத்தை போல, கோபுரங்கள் சாய்வதில்லை என பல சீரியல்களில் நடித்திருக்கிறார். தற்போது ஜீ பல ஒளிபரப்பாகி வரும் நினைத்தாலே இனிக்கும் என்ற சீரியலிலும் நடித்து வருகிறார். இவர் கிஷோரை விட 4 வயது மூத்தவர் என்பதால் இவர்களது காதலை நெட்டிசன்ஸ் விமர்சித்தனர். ஆனால், அதையெல்லாம் மீறி இவர்கள் கடந்த மார்ச் மாதம் திருமணம் செய்துக்கொண்டனர்.

இந்நிலையில் இந்த ஜோடி பிரபல யூடியூப் சேனல் ஒன்றிற்கு கலகலப்பாக பேட்டி கொடுத்துள்ளனர். அப்போது தொகுப்பாளினி, வயது மூத்த பெண்ணை திருமணம் செய்துக்கொண்டதால் வரும் கேலி கிண்டல்களை எப்படி எடுத்துக்கொள்கிறீர்கள்? அடுத்த Divorce நீங்க தான் என சிலர் விமர்சிப்பதை எப்படி பார்க்கிறீர்கள் என கேள்விக்கு? நாங்கள் அதையெல்லாம் தொடச்சி போட்டு போயிட்டே இருப்போம். அதற்கெல்லாம் பெருசாக ரியாக்ட் செய்யவே மாட்டோம்… அப்படி செய்தால் நாம் வாழ்க்கையில் முன்னேறவே முடியாது என கூறினார்கள்.

  • Kangana Ranaut Invites Priyanka Gandhi to watch Emergency movie எமர்ஜென்சி பார்க்க வாங்க.. பிரியங்கா காந்திக்கு அழைப்பு விடுத்த பாஜக எம்பி!
  • Views: - 465

    0

    0