அமைச்சர் செந்தில் பாலாஜி கைது எதிரொலி ; அண்ணாமலை வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு…

Author: Babu Lakshmanan
14 June 2023, 12:08 pm

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட நிலையில், கரூரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அமலாக்கத்துறை சோதனையை அடுத்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கரூரில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக, மாவட்ட பாஜக அலுவலகத்தில் போலீசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் சொந்த ஊரான சின்னதாராபுரம் அடுத்த தொட்டம்பட்டி கிராமத்தில் உள்ள அவரது பூர்வீக வீட்டில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இரண்டு காவலர்கள் மட்டும் அங்கு பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். அந்த வீட்டில் அண்ணாமலையின் தாய் – தந்தை வசித்து வருவதாக கூறப்படுகிறது.

  • Actor Sri Caught By Families இன்ஸ்டாகிராமில் நிர்வாண வீடியோ… முதல்முறையாக மகிழ்ச்சியை பகிர்ந்த நடிகர் ஸ்ரீ!