செந்தில் பாலாஜியின் கைதை பட்டாசு வெடித்து கொண்டாட்டம்… அமைச்சரின் சொந்த ஊரிலேயே அலப்பறை…!!

Author: Babu Lakshmanan
14 June 2023, 2:24 pm

கரூர் ; அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதை கரூரில் பட்டாசு வெடித்து கொண்டாடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கரூரில் மின்சாரம் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு மற்றும் அவர் சகோதரர் அசோக்குமார், நண்பர்கள் என அவர் தொடர்புடைய பல்வேறு இடங்களில் நேற்று காலை எட்டு மணி அளவில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை தொடங்கினர்.

சோதனையானது பல்வேறு குழுக்களாக பிரிந்து மத்திய போலீஸ் பாதுகாப்பு படை உதவியுடன் நள்ளிரவு வரை சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், அமலாக்கத்துறை சோதனையை அடுத்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அமைச்சரின் சொந்த ஊரான கரூரில் பல்வேறு இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா உள்ளிட்ட முக்கிய இடங்களில் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதை வரவேற்று அகில இந்திய சட்ட உரிமைகள் பாதுகாப்பு கழகத்தின் சார்பாக கரூர் ரவுண்டான பகுதியில் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாட முயன்றனர். இதனை தடுத்த போலீசார் அந்தக் கழகத்தைச் சேர்ந்த மூவரை கைது செய்தனர்.

  • srilankan tamizhans are negatively portrayed in retro movie said by bismi இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!