வீரம் படத்தில் நடித்த குழந்தையா இது? என்ன இப்படி வளர்ந்திட்டு இருக்காங்க – ஷாக்கான ரசிகர்கள்!
Author: Shree14 June 2023, 8:23 pm
சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த 2014ம் ஆண்டு வெளியான திரைப்படம் வீரம். அஜித்தின் மிரட்டலான ஆக்ஷன் காட்சிகளை கொண்டு வெளியான இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிகை தமன்னா நடித்திருந்தார். இந்த படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது.
இப்படம் தெலுங்கு, இந்தி என மற்ற மொழிகளிலும் வெளியானது. ஆனால், தமிழில் தான் அதிகம் வசூல் குவித்து சாதனை படைத்தது. இப்படத்தில் குழந்தையாக நடித்து பிரபலம் ஆனவர் பேபி யுவினா பார்வதி. பப்ளி அழகில் கொழுக் மொழுக் லுக்கில் நடித்து ரசிகர்கள் எல்லோரது மனதிலும் நீங்காத இடத்தை பிடித்தார்.
இந்நிலையில் பேபி யுவினா அடையாளமே தெரியாத அளவுக்கு டீனேஜ் வயதில் வளர்ந்திருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள், அட அந்த குட்டி பாப்பா இது? என எல்லோரும் பார்த்து வியந்து கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.