அடக்கி வாசிங்க… செந்திலோட சேர்ந்து குடும்பத்தோட மொத்தமா உள்ளே போயிருவீங்க : CMக்கு ஷ்யாம் எச்சரிக்கை!!

Author: Udayachandran RadhaKrishnan
15 June 2023, 1:25 pm

கடந்த அதிமுக ஆட்சியின் போது போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக மோசடியில் ஈடுபட்டதாக தற்போதை திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.

அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு தற்போது புழல் சிறை நிர்வாக கட்டுப்பாட்டில் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜி சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு தீவிர இதய சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அமலாக்கத்துறை கைதுக்கு நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பாஜக அரசு மீது திமுக கடும் விமர்சனத்தை வைத்து வருகிறது.

இந்த நிலையில் திமுகவுக்கு எதிராக புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமியின் மகன் டாக்ட ஷ்யாம் கிருஷ்ணசாமி கடும் கண்டனங்களை பதிவு செய்துள்ளார்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், கடந்த ஆட்சியில் நடந்த போக்குவரத்து துறை ஊழலக்கு தான் இப்போ செந்தில் பாலாஜிக்கு இந்த நிலை. இந்த ஆட்சியில் நடக்கும் டாஸ்மாக் ஊழலை விசாரிக்க துவங்கினால் செந்திலுடன் சேர்த்து மொத்த ஸ்டாலின் குடும்பத்திற்கும் இதே நிலை தான் வரும்! அடக்கி வாசியுங்கள், அந்த நாள் வெகுதொலைவில் இல்லை என பதிவிட்டுள்ளார்.

  • Udit Narayan viral kiss video ரசிகைக்கு LIVE முத்தம்…மேடையில் பிரபல பாடகரின் லீலை…வைரலாகும் வீடியோ..!