சிம்புவின் காதல் வலையில் இளம் நடிகை?.. இந்த முறை மிஸ் ஆகாதாம்..!

Author: Vignesh
15 June 2023, 4:30 pm

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் டாப் நடிகராக இருந்து தொடர்ந்து ஹிட் திரைப்படங்களில் நடித்து மார்க்கெட் பிடித்தவர் நடிகர் சிம்பு. இவர் குழந்தை நட்சத்திரமாக பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக தனது தந்தை டி.ராஜேந்தர் நான்கு வயதில் “என் தங்கை கல்யாணி” படம் மூலம் சிம்புவை கைக்குழந்தையாக அறிமுகம் செய்துவைத்தார்.

simbu

குழந்தை நட்சத்திரமாக பல்வேறு படங்களில் நடித்து சிறுவயதிலே சிம்பு புகழ் பெற்றார். தொடர்ந்து பல படங்களில் நடித்த அவர் பதினெட்டு வயதில் “காதல் அழிவதில்லை” படம் மூலம் நாயகனாக அறிமுகமானார். தம், குத்து, கோவில், மன்மதன், வல்லவன் உள்ளிட்ட பல்வேறு ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

simbu nayan-updatenews360

இந்நிலையில் காதல் தோல்வி, பாட வாய்ப்பு இல்லாமல் இருந்த சிம்பு தற்போது கம்பேக் கொடுத்து தொடர் வெற்றிபடங்களை கொடுத்து வருகிறார். இவர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் தற்போது நடிக்க இருக்கிறார். இந்த படத்தை கமலின் ராஜ் பிலிம்ஸ் நிறுவனம் தான் தயாரிக்க உள்ளதாம். இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க பாலிவுட் நடிகைகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி வருகிறது.

hansika - updatenews360

இதனுடைய இளம் நடிகையாக வலம் வரும் நிதி அகர்வாலை சிம்பு காதலிப்பதாக கோலிவுட்டில் முணுமுணுக்கப்படுகிறது. இவர்கள் இருவரும் சேர்ந்து ஈஸ்வரன் படத்தில் நடித்த போது இவர்களுக்கிடையே காதல் வளர்ந்ததாக சினிமா வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.

மேலும் நிதி அகர்வாலுடன் சிம்பு ரகசியமாக டேட்டிங் செய்து வருவதாகவும், தகவல் வெளியாகி உள்ளது. இதனிடையே தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் நிதி அகர்வாலை நடிக்க வைக்க சிம்பு சிபாரிசு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனுடைய சிம்பு ரசிகர்கள் இந்த முறை மிஸ் ஆகாது என்று கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

  • veera dheera sooran movie director express his worst feeling on delay release ஆதரவில்லாம இருந்தேன், அந்த வலியை தாங்கிக்க முடியல- மனம் நொந்த விக்ரம் பட இயக்குனர்..