பாஜக தொண்டர்கள் மீது கை வைத்தால் திருப்பி அடிப்போம் : CM ஸ்டாலினுக்கு அண்ணாமலை சவால்!!

Author: Udayachandran RadhaKrishnan
15 June 2023, 6:44 pm

மதுரை மாடக்குளம் பகுதியில் நடைபெற்ற தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவன திறப்பு விழாவில் கலந்து கொண்டு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது :

முதலமைச்சர் வரம்பு மீறி பேசியுள்ளார், கனிமொழி கைதுக்கு கூட ஸ்டாலின் இந்த அளவுக்கு கோபப்பட வில்லை, திமுகவின் கருவூலம் செந்தில் பாலாஜி என்பது ஊர்ஜிதமாகி உள்ளது.

கைதுக்கு பின்னர் முதலமைச்சர் போல ஸ்டாலின் நடந்து கொள்ளவில்லை
சபரீசன் எதற்காக செந்தில் பாலாஜியை பார்க்க மருத்துவமனைக்கு வந்தார்?

பாஜக தொண்டர்களை முதலமைச்சர் நேரடியாக மிரட்டி உள்ளார். பாஜக தொண்டர்களை முதலமைச்சர் நேரடியாக மிரட்டி உள்ளார். எதற்கும் தயாராக தான் உள்ளோம். முதல்வருக்கு பதில் சவால், தொண்டர் மீது கை வைத்து பாருங்கள்.

திமுக குண்டர்கள் வீதிக்கு வருவது தமிழகத்துக்கு புதிது அல்ல. நிலைமை கை மீறினால் கோட்டைக்கு வருவோம். கொடுத்தால் திருப்பி கொடுப்போம் நாங்கள் பழைய பாஜக அல்ல.

ஊழல் செய்யும் அமைச்சர் மீது கோபம் காட்டாமல் பாஜக தொண்டர்கள் மீது கோபத்தை காட்டுவது என்ன நியாயம்? டி.ஆர்.பாலு அவதூறு வழக்கில் ஆவணத்துடன் ஆஜராக உள்ளேன். மனித உரிமை ஆணைய தலைவரை கட்சி தலைவராக பயன்படுத்தி வருகின்றனர்

இந்தியாவில் எதிர்கட்சிகள் இணைந்தால் பாஜகவுக்கு லாபம் தான். எனவே எதிர்கட்சிகள் இணைவை பார்த்து பாஜக பயப்படவில்லை. எதிர்கட்சிகள் இணைவு என்பது கானல் நீர் தான். எதிர்கட்சிகள் இணைவது நடக்கவே நடக்காது.

தமிழகம், புதுவையில் 40 இடங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி வெல்லும்
அமலாக்கத்துறை கையால் நோட்டீஸ் ஒட்டலாம். தமிழகத்தில் திமுக கூட்டணி ஒரு சீட் கூட பெறாது. ஒரு சாமானியன் கூட செந்தில்பாலாஜி கைதை தவறு என கூறவில்லை.

அவர்களுடைய அமைச்சரை அரசு மருத்துவமனையில் வைக்க மாட்டோம் என்பது தான் திராவிட மாடல் , இதிலயே திராவிட மாடல் தோற்றுள்ளது
சென்னை மெட்ரோ வழக்கை எடுத்தால் முதலமைச்சர் ஸ்டாலின் சிறை செல்வது உறுதி என காட்டமாக பேசினார்.

  • Joshua Sridhar music journey இதெல்லாம் ஒரு இசையா…காது கொடுத்து கேட்க முடியல…பிரபல இசையமைப்பாளர் கொந்தளிப்பு..!
  • Views: - 353

    0

    0