இலாகா மாற்றத்திற்கு ஆளுநர் ஆர்என் ரவி மறுப்பு : அதிர்ச்சியில் திமுக அரசு!!
Author: Udayachandran RadhaKrishnan15 June 2023, 9:16 pm
அமைச்சர் செந்தில்பாலாஜி கைதாகி சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்திருக்கும் இந்த வேளையில் அவர் வகித்த பதவியை முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் முத்துச்சாமிக்கு கூடுதலாக பதவியை ஒதுக்கி தமிழக ஆளுநருக்கு பரிந்துரை செய்தார்.
இதற்கான கடிதம் அரசு தரப்பு மூலம் ஆளுநரிடம் கொடுக்கப்பட்டது. இதைக்கண்ட ஆளுநர் ரவி இந்தக் கடிதத்தை நான் ஏற்றுக்கொள்ள முடியாது.
இந்தக் கடிதத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு இருக்கிறது மட்டும் குறிப்பிட்டு இருக்கிறது. செந்தில்பாலாஜி அமலாக்கத்துறை மூலம் குற்றவாளி என கைது செய்யப்பட்டு இருப்பதை கடிதம் மூலம் தமிழக அரசு தெரியப்படுத்தவில்லை.
மேலும் செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக குறிப்பிட்டுள்ளதால் இலாகா மாற்றத்தை நான் பரிந்துரைக்க முடியாது என ஆளுநர் மாளிகை கடிதத்தை திருப்பி அனுப்பியுள்ளது.