இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகிக்கு அரிவாள் வெட்டு : பாஜக பிரமுகரை கைது செய்யக் கோரி சாலை மறியல்..!!

Author: Babu Lakshmanan
16 June 2023, 8:32 am

திருச்சி ; திருச்சியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் நிர்வாகியை அரிவாளால் வெட்டிய சம்பவத்தில் பாஜக பிரமுகரை கைது செய்யக் கோரி நள்ளிரவில் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருச்சி மாநகர் மாவட்டம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் அரியமங்களம் அம்மாகுளம் கிளைச் செயலாளராக தவ்பிக் என்பவர் செயல்பட்டு வருகிறார். அதே பகுதியில் பாஜகவைச் சேர்ந்த வினோத் என்பவர் கஞ்சா விற்பனை, செயின் பறிப்பு , இரண்டு சக்கர வாகன திருட்டு போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றார். அப்பகுதியில் கஞ்சா விற்பனைக்கு எதிராகவும், தொடர்ந்து தவ்பிக் குரல் கொடுத்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று இரவு தவ்பிக் தனது வீட்டுக்கு சென்று கொண்டிருந்த பொழுது, பிஜேபி பிரமுகரான வினோத் அவரது கூட்டாளிகள் அரிவாளுடன் வந்து தவ்பிக்கை சுற்றி வளைத்து வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். இதனை கண்ட பொதுமக்கள் உடனடியாக தவ்பிக்கை மீட்டு படுகாயத்துடன் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனை அறிந்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட தலைவர் லெனின் தலைமையில் வினோத் மற்றும் கூட்டாளிகளை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திடீரென திருச்சி அரசு மருத்துவமனை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து காவல் துறையினர் அவர்களுடன் சமாதான பேச்சை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தத்தை அடுத்து சாலை மறியலை கைவிட்டனர்.

தவ்பிக் போதை பழக்கத்திற்கெதிராக தொடர் போராட்டங்களை நடத்தி வந்தார். அப்பகுதியில் பல்வேறு மக்கள் பணியில் ஈடுபட்டு வருவதை பொறுத்துக் கொள்ள முடியாத பாஜகவைச் சேர்ந்த வினோத் சமூக விரோத கும்பலே இத்தகைய கொடூர செயலை செய்திருக்கிறார். எனவே காவல்துறை உடனடியாக சம்மந்தபட்ட குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். தமிழக அரசு மக்கள் சேவையில் ஈடுபட்டுவந்த தவ்பிக்கு உரிய மேல் சிகிச்சை வழங்கிட வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 338

    0

    0