‘திமுக-காரனை சீண்டி பாக்காதீங்க – இது மிரட்டல் அல்ல எச்சரிக்கை’ ; கோவையில் திமுகவினர் ஒட்டிய போஸ்டர் வைரல்…!!

Author: Babu Lakshmanan
16 June 2023, 4:43 pm

திமுக கண்டன பொதுக்கூட்டம் நடைபெறுவதை முன்னிட்டு கோவையில் ஒட்டப்பட்டு வரும் போஸ்டர்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அமைச்சர் செந்தில் பாலாஜி- அமலாக்க துறையினர் வழக்கே கடந்த மூன்று தினங்களாக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று கோவையில் திமுக சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இந்த பொதுக்கூட்டத்தில் திமுக மூத்த நிர்வாகிகள் வீரமணி, டி ஆர் பாலு, ராசா உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகளும் பலர் பங்கேற்கின்றனர்.

இன்று மாலை சிவானந்த காலனி பகுதியில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்நிலையில் கோவை மாநகரில் காந்திபுரம், சிவானந்த காலனி, ரயில் நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திமுகவினர் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். சிவானந்த காலனி பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களில் “திமுக காரனை சீண்டி பாக்காதீங்க- இது மிரட்டல் அல்ல எச்சரிக்கை…” எனவும், மற்றொரு போஸ்டரில் #WE STAND with ANNAN VSB” என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களில், கலைஞர் கருணாநிதி கூறிய “எங்கள யாரும் அடிக்க முடியாது- நான் திருப்பி அடிச்சா உங்களால தாங்க முடியாது” என ஒன்றிய அரசை குறிப்பிட்டுள்ளது. மேலும் அந்த போஸ்டரில், பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர், மிசா வழக்கின் போது எடுக்கப்பட்ட மு.க.ஸ்டாலின் ஆகியோரின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளது.

  • ags condition for producing str 50 பிரச்சனையையே போர்வையாக போர்த்திக்கொண்டு தூங்கும் சிம்பு பட இயக்குனர்! மீண்டும் மீண்டுமா?