சித்தி கொடுமை வீட்டை விட்டு எஸ்கேப் ஆன அஞ்சலி..- அதிர்ச்சி தகவலை வெளியிட்ட பிரபலம்..!

Author: Vignesh
16 June 2023, 6:30 pm

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக நடித்து வந்த அஞ்சலி ஆந்திராவில் பிறந்து வளர்ந்தவர். இவர் கற்றது தமிழ் படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழில் அறிமுகமானார். இவர் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது முதல் படமே மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி அஞ்சலி கோடம்பாக்கம் ஏரியாவில் ஒரு ரவுண்டு வந்தார். இதனிடையே, நடிகர் ஜெயுடன் காதலில் இருந்து வந்த அஞ்சலி ஒரே வீட்டில் இருவரும் வசித்து வந்ததாகவும் அரசல் புரசலாக பேசப்பட்டது.

anjali-updatenews360-1

அதன்பின் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். தமிழில் வாய்ப்பு இல்லாமல் தெலுங்கு தேசம் பக்கம் சென்ற அஞ்சலி குறித்து பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு பகீர் தகவலை தற்போது வெளியிட்டுள்ளார். அதாவது ஜெய் அஞ்சலி காதலித்தபோது இருவரும் திருமணம் செய்து கொண்டதாக பேசப்பட்டது. அதெல்லாம் பொய் என்று கூறினார்களே தவிர காதலிக்கவில்லை என்று மறுப்பு தெரிவிக்கவில்லை என்றும், 90ஸ் காலத்தில் நடித்த நடிகை ஒருவர் எப்போதும் சோகமாகவே இருப்பார் அப்போது பேட்டியளித்த அவர் தன்னுடைய சித்தி தன்னை கட்டாயப்படுத்தி பல விஷயங்களை செய்ய சொல்கிறார் என்று ஓபனாக கூறியிருந்தார். தற்போது திருமணம் ஆகி நன்றாக இருக்கிறார்.

அந்த நடிகை போல் தான் அஞ்சலிக்கு ஒரு தடையாக மாறி மோதலாக மாறியது. ஒரு சமயத்தில் சித்தியை விட்டு அஞ்சலி ஓடிவிட்டார். ஒரு இயக்குனர் தான் அஞ்சலையும் அவரது சித்தியையும் ஆட்டிப்படைத்து வந்ததாக அப்போதைய பத்திரிகைக்களில் பேசப்பட்டது. ஆனால், அப்படி ஒன்றும் இல்லை என்று அந்த இயக்குனர் கூறிவிட்டார். அதன் பின் சித்தியின் டார்ச்சர் தாங்க முடியாமல் சினிமாவே வேண்டாம் என்று ஆந்திராவுக்கு அஞ்சலி ஓடிவிட்டார். தனி மனித சுதந்திரம் இல்லை என்று தெலுங்கில் இருக்கும் ஒரு தயாரிப்பாளர் உதவியுடன் வாய்ப்பு கேட்டு நடித்து வருவதாக செய்யாரறு பாலு அஞ்சலி குறித்து தெரிவித்துள்ளார்.

anjali-updatenews360
  • Sawadeeka Songஅட்டகாசகமாக வெளிவந்த விடாமுயற்சி “Sawadeeka”பாடல்…இருங்க பாய் இது ஆரம்பம் மட்டும் தான்..!
  • Views: - 547

    3

    0