அஜித்தை தத்தெடுக்க நினைத்த ஜெயலலிதா… பலவருட ரகசியத்தை உடைத்த பிரபலம்

Author: Shree
17 June 2023, 9:55 am

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக சிறந்து விளங்கிக்கொண்டிருக்கும் அஜித் குடும்பத்தின் ஏழ்மை காரணமாக மெக்கானிக் வேலை செய்துவந்தார். அங்கேயே கார், பைக் ஓட்ட கற்றுக்கொண்டார். அப்போது பார்ப்பதற்கு அழகாக இருந்த அஜித்திற்கு மாடலிங் செய்ய வாய்ப்புகள் கிடைக்க நிறைய விளம்பரங்களில் நடித்தார். பின்னர் சில காட்சிகளில் நடிக்க திரைப்பட வாய்ப்புகள் அவரை தேடி வந்தது.

இதில் வரும் வருமானம் மூலம் தனக்கு விருப்பமான மெக்கானிக் தொழிலை சொந்தமாக ஆரம்பிக்கலாம் என்று எண்ணி இதனை செய்ய ஆரம்பித்தார். பின்னர் சினிமாவே வாழ்க்கையாகிவிட்டது. அஜித்தை சினிமாவில் அறிமுகம் செய்து வைத்தது பிரபல பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் தான். தமிழில் காதல் கோட்டை, காதல் மன்னன், வாலி, அமர்க்களம், தீனா, பூவெல்லாம் உன் வாசம், வில்லன், அட்டகாசம், வரலாறு, கீரிடம், பில்லா, அசல், மங்காத்தா, பில்லா 2 போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

இவரது ரசிகர்கள் இவரை அல்டிமேட் ஸ்டார் என்றும் AK என்றும் அழைக்கிறார்கள். நடிகர் என்பதையும் தாண்டி தற்போது கூட அஜித், கார் ரேஸ், பைக் டூர் என பிசியாக தனக்கு பிடித்த விஷயங்களை செய்து மகழ்ச்சியாக இருந்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது பிரபல குணசித்திர நடிகரான மீசை ராஜேந்திரன் பேட்டி ஒன்றில் அஜித்திற்கு ஜெயலலிதா அம்மாவை மிகவும் பிடிக்கும் என்றும் ஜெயலலிதாவும் அஜித்தின் திருமணங்களில் கலந்துகொண்டு தன் மகனை வாழ்த்தியது போன்று வாழ்த்தியதாக கூறினார்.

மேலும் ஜெயலலிதா நடிகர் அஜித்தை வாரிசாக தத்தெடுத்து வளர்க்கலாம் என திட்டமிட்டிருந்தாக கூட அன்றைய காலத்தில் வதந்திகள் வெளியானது. அப்படி மட்டும் நடந்திருந்தால் இன்னேரம் அஜித் தான் முதலமைச்சராக இருந்திருப்பார் என அவர் அந்த பேட்டியில் கூறியுள்ளார். பலருக்கும் தெரிந்திராத இந்த விஷயத்தை கேட்டு ரசிகர்கள் செம ஷாக் ஆகிவிட்டனர்.

  • Kannada superstar Shivrajkumar cancer recovery நான் உயிரோட இருக்க காரணம் என் மனைவி தான்…நடிகர் சிவராஜ்குமார் உருக்கமாக பேசிய வீடியோ வைரல்..!
  • Views: - 515

    2

    0