அரசு மருத்துவமனை முன்பு மனைவியை ஓடஓட அரிவாளால் வெட்டிய கணவன்.. சிகிச்சைக்காக வந்த போது நிகழ்ந்த கொடூரம்..!!!

Author: Babu Lakshmanan
17 June 2023, 11:56 am

பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்த மனைவியை கணவன் அரிவாளால் சரமாரியாக ஓட ஓட விரட்டி வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே வி.கே மில் பகுதியை சேர்ந்தவர் மணி. இவருடைய மனைவி பிரியதர்ஷினி. இருவருக்கும் இடையே ஏற்கனவே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கணவன் தாக்கியதாக கூறி மனைவி பிரியதர்சினி பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக இன்று காலை வந்துள்ளார்.

அப்போது அங்கு நின்று கொண்டிருந்த மனைவியை ஓட ஓட விரட்டி அரிவாளால் சரமாரியாக வெட்டியதில் படுகாயம் அடைந்த மனைவி பிரியதர்ஷினி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தப்பி ஓட முயன்ற கணவர் மணியை அரசு மருத்துவமனை பாதுகாவலர்கள் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். கணவன் மனைவி பிரச்சினையில் மனைவியை அரசு மருத்துவமனை வளாகத்தில் வைத்து சரமாரியாக ஓட ஓட விரட்டி வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து பழனி நகர போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Allu Arjun press meet emotional statement நானும் ஒரு குழந்தைக்கு அப்பா தான்..கண்ணீரோடு பேட்டியளித்த அல்லு அர்ஜுன்..!
  • Views: - 431

    0

    0