2024 தேர்தலில் விஜய்க்கு ஆதரவு.. சமத்துவ மக்கள் கட்சி அறிவிப்பு : சரத்குமார் வைத்த ட்விஸ்ட்!!!

Author: Udayachandran RadhaKrishnan
17 June 2023, 6:56 pm

சென்னையில் இருந்து மதுரை விமான நிலையம் வந்த சமத்துவ மக்கள் கட்சி தலைவரும், நடிகருமான சரத்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார் அப்போது செய்தியாளர்கள்

நடிகர் விஜய் மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியுள்ளார் இதனை எவ்வாறு பார்க்கிறீர்கள் என கேள்வி கேட்டதற்கு, எல்லா நடிகர்களும் தொடர்ந்து பொதுநல சேவைகளில் ஈடுபட்டு வருகின்றனர்., நானும் நடிக்க வந்த காலத்தில் இருந்து நிறைய உதவிகளை செய்து வருகின்றனர். தற்போது விஜய் கல்விக்காக உதவி செய்து வருகிறார் அது வரவேற்கத்தக்கது தான்.

விஜய் அரசியலுக்கு வந்தால் ஆதரிப்பீர்களா.? என்று கேட்டதற்கு
நான் ஒரு அரசியல் கட்சித் தலைவராக இருக்கிறேன்., 2026 தேர்தலை எப்படி சந்திக்க வேண்டும் என திட்டத்தை வகுத்துக் கொண்டிருக்கிறேன் எல்லாரும் அரசியலுக்கு வரலாம்.

ஒவ்வொரு குடிமகனும் அரசியலுக்கு வர வேண்டியது அவசியம்., இது சமத்துவ நாடு 14 வயசிலேயே பள்ளியிலேயே பாடத்திட்டத்தில் அரசியலை கற்றுக் கொடுக்க வேண்டும் என நினைப்பவன் நான்.,யார் வந்தாலும் சந்தோசம் மகிழ்ச்சிதான் எனக் கூறினார்.

செந்தில் பாலாஜி மீது நடவடிக்கை குறித்த கேள்விக்கு. உடல் நலம் தேறிய பிறகு அவரிடம் கேட்க வேண்டிய கேள்வி என்றார்.

சமத்துவ மக்கள் கட்சி சார்பாக 2026 தேர்தலை எப்படி எதிர்கொள்ள உள்ளீர்கள். 2026 ஆம் ஆண்டு ரொம்ப தூரம் உள்ளது முதலில் நாளைக்கு இருப்போமா என்பதை பார்ப்போம்..

  • Tom Holland and Zendaya gets engaged SPIDER MAN ரீல் ஜோடி ரியல் ஜோடியாகிறது.. முடிவுக்கு வந்த 4 வருட டேட்டிங்!
  • Views: - 424

    0

    0