அமைச்சர் உதயநிதி அனைவரையும் சாம்பியனாக மாற்றி வருகிறார் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்!!

Author: Udayachandran RadhaKrishnan
17 June 2023, 8:23 pm

சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெறும் சர்வதேச ஸ்குவாஷ் போட்டி நிறைவு விழா தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்கலந்து கொண்டு, ஸ்குவாஷ் போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பதக்கங்களை வழங்கினார்.

அப்போது பேசிய அவர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அனைவரையும் சாம்பியனாக மாற்றி வருகிறார். கேலோ இந்தியா 2023 தமிழகத்தில் நடைபெற உள்ளது. சர்வதேச குழுவில் உள்ள நான்கு பேரில் மூன்று பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள்.

விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை முடித்த பிறகு பன்னாட்டு போட்டிகளை நடத்தும் சிறந்த இடமாக தமிழ்நாடு விளங்குகிறது என தெரிவித்துள்ளார்.

  • sai abhyankkar is the music director for allu arjun atlee project அட்லீ-அல்லு அர்ஜுன் படத்துக்கு இவர்தான் மியூசிக்கா? பிளாஸ்ட்டா இருக்கே!