இங்கிலாந்தில் ஒரே வாரத்தில் 3 இந்தியர்கள் கொலை : கேரள இளைஞருக்கு நேர்ந்த கதி.. அதிர்ச்சி சம்பவம்!!!
Author: Udayachandran RadhaKrishnan18 June 2023, 11:54 am
இங்கிலாந்து நாட்டின் லண்டனில் கெம்பெர்வல் நகரில் சவுத்ஆம்டன்வெ பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கேரளாவை சேர்ந்த அரவிந்த் சசிக்குமார் (வயது 38) என்பவர் வசித்து வந்தார். இவர் கேரளாவை சேர்ந்த மேலும் சிலருடன் வசித்து வந்தார்.
இந்நிலையில், கடந்த சனிக்கிழமை அதிகாலை 1 மணியளவில் அரவிந்த் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார். கேரளாவை சேர்ந்த சலீம் என்பவரே அரவிந்தை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்துள்ளார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து விரைந்து வந்த போலீசார் கொலையாளி சலீமை கைது செய்தனர். மேலும் இந்த கொலைக்கான காரணம் இதுவரை வெளியாகத நிலையில் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த ஒரே வாரத்தில் இங்கிலாந்தில் இதுவரை 3 இந்தியர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த வாரம் இங்கிலாந்து குடியுரிமைபெற்ற இந்தியராக கிரேஷ் ஒ மெலி குமார் (வயது 19) என்ற இளைஞரும், ஐதராபாத்தை சேர்ந்த தேஜஸ்வின் என்ற இளம்பெண்ணும் கொலை செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.