முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ரொம்ப ரொம்ப நன்றி : தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு ட்வீட்!!!

Author: Udayachandran RadhaKrishnan
18 June 2023, 7:07 pm

சென்னை வடக்கு மாவட்ட திமுக சார்பில் கலைஞர் நூற்றாண்டு பிறந்தநாள் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்றுப் பேசிய திமுக நிர்வாகி சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக உள்ள பாஜகவைச் சேர்ந்த நடிகை குஷ்பு குறித்து அவதூறான கருத்துக்களைத் தெரிவித்திருக்கிறார்.

இதற்குக் கண்டனம் தெரிவித்து நடிகை குஷ்பு டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த நிலையில், திமுகவில் இருந்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தி நிரந்தரமாக நீக்கப்படுவதாக திமுக தலைமை அறிவித்துள்ளது. இந்த நிலையில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை நீக்கியதற்காக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி -என குஷ்பு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது , திமுகவில் இருந்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை நீக்கியதற்காக முதல் அமைச்சர் மு.க . ஸ்டாலினுக்கு நன்றி. திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீதான நீக்க நடவடிக்கை மகிழ்ச்சி . அவதூறாக பேசியதற்காக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். என தெரிவித்துள்ளார் .

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி