ஒரே மாசத்துல புசு புசுன்னு ஆக இந்த கீரையோட பருப்பும் நெய்யும் சேர்த்து சாப்பிடுங்க!!!

Author: Hemalatha Ramkumar
18 June 2023, 7:39 pm

நீர்வளம் நிறைந்த பகுதிகளில் படர்ந்து காணப்படும் பொன்னாங்கண்ணி கீரையில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது. இந்த கீரைக்கு பொன்னிகீரை, கொடுப்பை கீரை, சீதை, சீதேவி போன்ற வேறு பெயர்களும் உண்டு.

இந்த பொன்னாங்கண்ணிக் கீரையில் நம் உடலுக்கு தேவையான அத்தியாவசியமான வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. பொன்னாங்கண்ணியில் இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ், புரதம், வைட்டமின்கள் ஏ, பி, சி போன்றவை அடங்கி உள்ளன. சிட்ரோஸ்டிரால், கெம்பஸ்டிரால், ஓலியனோலிக் அமிலம், லுபியால் போன்றவைகளும் பொன்னாங்கண்ணியில் காணப்படுகின்றன.

பொன்னாங்கண்ணிக்கீரை குளிர்ச்சி தன்மை உடையது. இந்த கீரையை அவியலாகவோ பொறியலாகவோ துவையலாகவோ அல்லது பருப்புடன் சேர்த்து கடைந்து குழம்பாகவோ நாம் உணவுடன் சேர்த்துக் கொள்ளலாம். இந்த பொன்னாங்கண்ணி கீரை உண்பதால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி காண்போம்.

பொன்னாங்கண்ணிக் கீரையை பச்சையாகவோ அல்லது சமையல் செய்தோ தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நமது கண்கள் சிறந்த பார்வை திறனை பெறுகிறது. ஏனெனில், பொன்னாங்கண்ணிக் கீரையில் கண்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கும் சத்துக்கள் ஏராளமாக அடங்கியுள்ளன. மாலைக்கண் நோய் உள்ளவர்கள் பொன்னாங்கண்ணிக் கீரையை அதிகம் உட்கொள்வதால் இந்த நோயிலிருந்து விடுபடலாம்.

பொன்னாங்கண்ணி கீரை தொடர்ந்து உண்பதால் உடலில் அதிகப்படியான உடல் உஷ்ணத்தின் காரணமாக ஏற்படும் தலைவலி, கண் எரிச்சல், கண்களில் நீர் வடிதல் போன்ற பிரச்சனைகள் மிக எளிதில் குணமடைகிறது. ஏனெனில் பொன்னாங்கண்ணிக் கீரை மிகவும் குளிர்ச்சித் தன்மை உடையது.

பொன்னாங்கண்ணி கீரையை சாறாக்கி அதில் சம அளவு கேரட் சேர்த்துக் கொள்ளவும். இதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து தொடர்ந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் மூல நோய்க்கு நல்ல தீர்வாக அமைகிறது. மூலத்தால் ஏற்படும் இரத்தப்போக்கு கட்டுப்படுத்தப்படுகிறது.

பொன்னாங்கண்ணி கீரையில் கால்சியம் சத்து அதிகம் காணப்படுகிறது. இதன் காரணமாக நமது உடலில் உள்ள எலும்புகள் மற்றும் பற்கள் அதிக வலிமை அடைகின்றன. மேலும் எலும்புகளின் அடர்த்தி குறைவால் ஏற்படும் மூட்டு வலி, எலும்பு வலி போன்றவை போக்கப்படுகிறது. உடைந்த எலும்புகள் எளிதில் குணமாவதற்கு உதவி புரிகிறது.

விபத்து போன்ற காரணங்களால் உடல் எடையை இழந்தவர்கள், குறைவான உடல் எடை உள்ளவர்கள் அல்லது உடல் மெலிந்து ஒல்லியாக காணப்படுபவர்கள் உடல் எடையை அதிகரிக்க பொன்னாங்கண்ணி இலையை துவரம் பருப்புடன் நெய் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடலின் தசைகள் வளர்ச்சியடைந்து உடல் எடை அதிகரிக்கும்.

அதிகப்படியான குடிப்பழக்கத்தால் கல்லீரல் பாதிப்படைந்தவர்கள் பொன்னாங்கண்ணி கீரையை சிறிது சிறிதாக நறுக்கி, பாசிப்பருப்பு, சின்ன வெங்காயம், சீரகம், பூண்டு, மிளகுத்தூள் சேர்த்து வேகவைத்து மசியல் செய்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கல்லீரலில் ஏற்பட்ட பாதிப்புகள் குணமடையும். மேலும் இரத்தத்தில் உள்ள நச்சு கழிவுகள் வெளியேற்றப்பட்டு இரத்தம் சுத்திகரிக்கப்படுகிறது.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • Bala and Kanja Karuppu relationship OFFICE BOY-யா வேல செஞ்ச பிரபல காமெடி நடிகர்…வாழ்க்கை கொடுத்த இயக்குனர் பாலா..!
  • Views: - 739

    0

    0