சினிமாவை விட்டு விலகப்போகிறேன்… ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி கொடுத்த லோகேஷ் கனகராஜ்!

Author: Shree
19 June 2023, 6:23 pm

கோவையை சேர்ந்த இளம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மாநகரம் படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து கைதி படத்தை இயக்கை பெரிய கவனத்தை பெற்றார். இதன் பின்னர் விஜய்யுடன் சேர்ந்து மாஸ்டர் படத்தை இயக்கினார். படம் மாஸ் ஹிட் ஆனது. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக மாறினார்.

அந்த வெற்றியை தொடர்ந்து கமல்ஹாசனை வைத்து விக்ரம் படத்தை இயக்கினார். படம் மெகா ஹிட் அடித்து வசூல் சாதனை குவித்தது. இதையடுத்து மீண்டும் விஜய்யுடன் இணைந்து லியோ படத்தை இயக்கி வருகிறார். இதற்காக காஷ்மீருக்கு படக்குழு அண்மையில் சென்றிருந்தது. அதையடுத்து சென்னையில் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தற்போது சமீபத்திய பேட்டி ஒன்றில், தான் வெகு சீக்கிரத்தில் சினிமாவை விட்டு விலகப்போவதாக கூறியுள்ளார். மேலும் பேசிய அவர் மொத்தமாக 10 படங்கள் மட்டும் தான் எடுப்பேன் என்றும் அதன் பின் இந்த துறையை விட்டுவிடுவேன் என கூறி இருக்கிறார்.

  • Vijay Antony live concert cancellation ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட விஜய் ஆண்டனி…வெளிவந்த அறிக்கையால் பரபரப்பு..!
  • Views: - 351

    0

    0