வறுமையில் வாடிய ராஜமௌலி குடும்பம்… 360 ஏக்கர் சொத்து இருந்தும் ஏழையானது எப்படி?
Author: Shree19 June 2023, 7:40 pm
தென்னிந்திய சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனரான ராஜமௌலி பாகுபலி படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகத்தை உலக வரைபடத்தில் கொண்டு வந்த மேவரிக் இயக்குனர் என புகழ் பாராட்டப்பட்டார். வரலாற்று கதையம்சம் கொண்டு உருவான பாடம் இரண்டு பாகங்களாக வெளியாகி சரித்திர சாதனை படைத்தது. ஒவ்வொரு காட்சியையும் செதுக்கி செதுக்கி உருவாக்கிய ராஜமௌலி பிரம்மாண்ட படைப்பாளியாக முத்திரை குத்தப்பட்டார்.
அதன் மாபெரும் வெற்றியை அடுத்து ஆர் ஆர் ஆர் படத்தை இயக்கியிருந்தார். அடித்ததாக அதே சாயலில் மகாபாரத கதையை படமாக்க உள்ளார். இந்நிலையில் ராஜமௌலியின் படை பலம் மற்றும் பணபலம் மிக்க குடும்பமாம். மொத்தம் 13 பெரி இருந்த அந்த குடும்பத்தில் 360 ஏக்கர் சொத்து சொந்தமாக வைத்திருந்தார்களாம். ஆனால் கொடிய வறுமையால் ராஜமௌலி சுமார் 10 வயது இருக்கும்போது மொத்த சொத்தும் விற்றுவிட்டு சென்னையில் உள்ள ஒரு சின்ன அப்பார்ட்மென்டில் குடிபெயந்தார்களாம்.

அந்த வீட்டில் 13 பேர் இருந்தாலும், ராஜமௌலியின் அண்ணன் ஒருவரின் வருமானத்தில் தான் மொத்த குடும்பமும் வழிநடத்தி வந்துள்ளனர். 22 வயது வரை ராஜமௌலியும் எந்த வேலைக்கும் செல்லவில்லையாம். பின்னர் எதாவது செய் என அப்பா கொடுத்த அழுத்தத்தினால் தான் ராஜமௌலி வாழ்க்கையை சீரியசாக எடுத்துக்கொண்டு பணியாற்ற தொடங்கி சினிமாவில் இவ்வளவு பெரிய சாதனை படைத்தாராம்.